Kulanthai Kavingar Yaar
பொது அறிவு சார்ந்த வினா விடைகளை பற்றி பதிவு செய்து வருகின்றோம். இன்றைய காலத்தில் பலரும் தங்களை அரசு தேர்வுகளுக்கு தயார் வருகின்றனர். அரசு பொதுத்தேர்வில் பொது அறிவு வினா விடை ஒரு பகுதியாக கேட்கப்படுகிறது. அதனால் நீங்கள் தினமும் ஒரு பொது அறிவு வினா விடைகளை நாம் தெரிந்து வைத்து கொள்வதன் மூலம் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆக அரசு தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க..
Kulanthai Kavingar Valliappa
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் அழ.வள்ளியப்பா. இவரை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
Kulanthai Kavingar Valliappa Story | பிறப்பு:
இவர் 1922-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். “ஆளுக்குப் பாதி” என்னும் தம் முதல் கதையை எழுதினார்.இந்த கதைக்கு அவருக்கு கிடைத்த பாராட்டு பிற்காலத்தில் இவரை எழுத்தாளராக மாற்றுவதற்கு காரணமாக இருந்தது.
தொழில்கள்:
1941-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் பணியாற்றினார், இதில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே கவிதையும், கட்டுரையும் எழுத தொடங்கினார். வங்கி வேலையிலுருந்து ஓய்வு பெறும் வரை எழுதி கொண்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
இலக்கிய தொண்டு:
அழ.வள்ளியப்பா என்ற பெயரானது எல்லாரும் மனதிலும் பதிருப்பதற்கு காரணமாக இருந்தது அவர் குழந்தைகளுக்காக வெளியிட்ட மலரும் உள்ளம் என்ற நூல் தான் காரணமாக இருக்கிறது. அதன் பிறகு சிரிக்கும் பூக்கள் என்ற கவிதையை வெளியிட்டார் இதன் மூலம் தான் குழந்தை கவிஞர் எண்று அழைக்கப்பட்டார். இவர் உடல் நிலை குறைபாடு காரணமாக 1989 மார்ச் 16 அன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |