புதுக்கவிதையின் தந்தை யார்? | Puthukavithai Thanthai Yaar

Puthukavithai Thanthai Yaar

புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

மரபு கவிதை எனும் பெயர் கடந்து இப்போது புதுக்கவிதை என்று மாறியுள்ளது. புதுக்கவிதையின் தோற்றத்திற்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக் கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும். இந்த பதிவு அரசு தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இது போன்ற பொது அறிவு கேள்விக்கான விடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது தெரியுமா?

புதுக்கவிதை வளர்ச்சி:

பாரதி வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்து அதை போன்று தமிழ் மொழியிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தில் காட்சிகள் என்ற தலைப்பில் பாரதி புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.

பாரதி வழியை பின்பற்றி ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப் புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதையின் தந்தை யார்?:

விடை: தமிழ்ப்புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ந.பிச்சமூர்த்தி.

இவர் நவம்பர் 8, 1900-ஆம் வருடம் பிறந்து, டிசம்பர் 4, 1976-ஆம் வருடத்தில் உலகத்தை விட்டு உயிர் துறந்தார்.

பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

புதுக்கவிதை வளர்ந்து வந்த முக்காலம்:

 1. மணிக் கொடிக் காலம்
 2. எழுத்து காலம் 
 3. வானம்பாடி காலம் 

புதுக்கவிதை வளர்ச்சியில் தோன்றிய இதழ்கள்:

சிற்றிதழ்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும், இணைய ஊடகத்தில் பல வலைத்தளங்களிலும்  புதுக்கவிதைகள் சிறந்து விளங்குகிறது.

புதுக்கவிதையின் சான்றுகள்:

 1. நல்ல காலம் வருகுது
  நல்ல காலம் வருகுது
 2. தெருவிலே நிற்கிறான்
  குடுகுடுப்பைக் காரன்!
 3. உன் கையிலா கடிகாரம்?
  கடிகாரத்தின் கையில்
  நீ!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil