சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றவர்களின் பட்டியல்..!

Advertisement

National Film Award for Best Feature Film in Tamil

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Film Award for Best Feature Film in Tamil) ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது.

டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன் முதலாக வழங்கப்பட்டன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

“சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்”, “இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்“, “மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்“, என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.

1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.

சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பட்டியல்:

  • சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்
  • இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
  • மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
  • சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
20 முக்கிய இந்திய விருதுகள் பெயர்கள்..!

இதுவரை விருது பெற்றவர்களின் பட்டியல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஆண்டு திரைப்படம்  இயக்குனர்
1954 மலைக்கள்ளன் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
1954 அந்த நாள் எஸ்.பாலசந்தர்
1954 எதிர்பாராதது ச. நாராயணமூர்த்தி
1955 மங்கையர் திலகம் எல்வி பிரசாத்
1956 குலதெய்வம் கிருஷ்ணன்-பஞ்சு
1957 முதலாலி முக்தா வி. சீனிவாசன்
1958 தங்கப்பதுமை ஏஎஸ்ஏ சாமி
1958 அன்னையின் ஆனை ச. நாராயணமூர்த்தி
1959 பாக பிரிவினை ஏ.பீம்சிங்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன் பிஆர் பந்துலு
1959 கல்யாண பரிசு சி.வி.ஸ்ரீதர்
1960 பார்த்திபன் கனவு டி.யோகானந்த்
1960 பாதை தெரியுது பார்  நேமை கோஷ்
1960
களத்தூர் கண்ணம்மா ஏ.பீம் சிங்
1961 கப்பலோட்டிய தமிழன் பிஆர் பந்துலு
1961 பாசமலர் ஏ.பீம்சிங்
1961 குமுதம் அதுர்த்தி சுப்பா ராவ்
1962 நெஞ்சில் ஓர் ஆலயம் சி.வி.ஸ்ரீதர்
1962 அன்னை கிருஷ்ணன்-பஞ்சு
1962 சாரதா கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
1963
நானும் ஒரு பெண் ஏசி திருலோகச்சந்தர்
1963 கற்பகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
1963 கர்ணன் பிஆர் பந்துலு
1964 கை கொடுத்த தெய்வம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
1964 பழனி ஏ.பீம்சிங்
1964 சர்வர் சுந்தரம் கிருஷ்ணன்-பஞ்சு
1965 குழந்தையும் தெய்வமும் கிருஷ்ணன்-பஞ்சு
1965 திருவிளையாடல் ஏ.பி.நாகராஜன்
1966 ராமு ஏசி திருலோகச்சந்தர்
1967 ஆலயம் திருமலை, மகாலிங்கம்
1968 தில்லானா மோகனாம்பாள் ஏ.பி.நாகராஜன்
1969 இரு கோடுகள் கே.பாலச்சந்தர்
1970 ராமன் எத்தனை ராமநதி பி.மாதவன்
1971
வெகுளி பென் எஸ்.எஸ்.தேவதாஸ்
1972 பட்டிக்காடா பட்டணமா பி.மாதவன்
1973 திக்கற்ற பார்வதி சிங்கீதம் சீனிவாச ராவ்
1975 அபூர்வ ராகங்கள் கே.பாலச்சந்தர்
1977 அக்ரஹாரத்தில் கழுதை அக்ரஹாரத்தில் கழுதை
1979 பாசி துரை
1980 நெஞ்சத்தை கிள்ளாதே நெஞ்சத்தை கிள்ளாதே
1981 தணீர் தணீர் கே.பாலச்சந்தர்
1982 எழவது மனிதன் கே. ஹரிஹரன்
1983 ஒரு இந்திய கனவு கோமல் சுவாமிநாதன்
1984 அச்சமில்லை அச்சமில்லை பாரதிராஜா
1986 மௌன ராகம் மணிரத்னம்
1987 வீடு பாலு மகேந்திரா
1989 புதிய பாதை  ஆர்.பார்த்திபன்
1990 அஞ்சலி மணிரத்னம்
1991 வண்ண வண்ண பூக்கள் பாலு மகேந்திரா
1992 தேவர் மகன் பரதன்
1993 மகாநதி சந்தான பாரதி
1994 நம்மவர் கே.எஸ்.சேதுமாதவன்
1995 அந்திமந்தாரை பாரதிராஜா
1996 காதல் கோட்டை அகத்தியன்
1997
தி டெரரிஸ்ட் சந்தோஷ் சிவன்
1998 ஹவுஸ்ஃபுல் ஆர்.பார்த்திபன்
1999 சேது பாலா
2000 பாரதி ஞான ராஜசேகரன்
2001 ஊருக்கு நூறுபேர் பி. லெனின்
2002 கன்னத்தில் முத்தமிட்டல் மணிரத்னம்
2003 இயற்கை எஸ்பி ஜனநாதன்
2004 நவரச சந்தோஷ் சிவன்
2005 ஆடும் கூத்து டி.வி.சந்திரன்
2006 வெயில் வசந்தபாலன்
2007 பெரியார் ஞான ராஜசேகரன்
2008 வாரணம் ஆயிரம் கௌதம் வாசுதேவ் மேனன்
2009
பசங்க பாண்டிராஜ்
2010 தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமி
2011 வாகை சூடா வா ஏ.சற்குணம்
2012 வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல்
2013 தங்க மீன்கள் ரேம்
2014 குற்றம் கடித்தல் ஜி. பிரம்மா
2015 விசாரணை வெற்றிமாறன்
2016 ஜோக்கர் ராஜு முருகன்
2017 டு லெட் செழியன்
2018 பாரம் பிரியா கிருஷ்ணசாமி
2019 அசுரன் வெற்றிமாறன்
2020
சிவரஞ்சினியும் இன்றும் சில பெண்களும் வசந்த்
2020 சூரரைப் போற்று சுதா கொங்கரா பிரசாத்
2021 மண்டேலா சஷிகாந்த், சக்கரவர்த்தி ராமச்சந்திரா, பாலாஜி மோகன்
2022 கடைசி விவசாயி M.மணிகண்டன்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement