உலகிலேயே அதிக மழை பெய்யும் Top 5 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Rainiest Place in the World in Tamil

நாம் வாழும் உலகில் அதிக அளவு மழை பெய்யும் இடங்கள் ஏராளமாக உள்ளன. ஒரு சில இடங்களில் 10,000 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிகிறது. அப்படி உலகில் 10,000 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிகின்ற டாப் 5 இடங்களை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அது எந்தெந்த இடங்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள்=> உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா

Which is the Rainiest Place in the World:

1. மவ்சின்ராம் (Mawsynram):

Which is the rainiest place in the world in tamil

நமது பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்சின்ராம் தான். சிரபுஞ்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வருடத்திற்கு சராசரியாக 11,871 மில்லி மீட்டர் அளவு மழை பொழிகிறது.

வருடத்திற்கு சில முறை வெள்ளம் இந்த கிராமத்தின் தெருக்களை அருவிகளாக மாற்றும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமம் கிட்டத்தட்ட 12 மீட்டர் மழையால் அடித்துச் செல்லப்படுகிறது. இந்த கிராமவாசிகள் அதற்குப் பழகிவிட்டனர்.

மவ்சின்ராம் வங்காள தேசம் மற்றும் வங்காள விரிகுடாவிற்கு அருகில் இருப்பதன் காரணமாக இங்கு அதிக அளவு மழை பொழிகின்றது.

2. சிரபுஞ்சி (Cherrapunji):

Rainiest place in india in tamil

நமது பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சி தான். இங்கு வருடத்திற்கு சராசரியாக 11,777 மில்லி மீட்டர் அளவு மழை பொழிகிறது.

சிரபுஞ்சியின் உயரம் காரணமாக கீழே உள்ள சமவெளிகளில் வீசும் காற்று உயரமான இந்த இடத்திற்கு வரும் போது குளிர்ச்சியடைகிறது. அதனால் மழை மேகங்களை உருவாக்கி இங்கு அதிக மழைபொழிவை ஏற்படுத்துகிறது.

இங்கு அதிக மழை பெய்தாலும் குளிர்காலத்தில் இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு இங்கு மழை பெய்யாது. சில சமயங்களில் இப்பகுதியில் 15 லிருந்து 21 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.

இதையும் படியுங்கள்=> உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா

3. டுடென்டோ (Tutunendo):

Highest rainfall in the world in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள டுடென்டோ பற்றி தான். இங்கு வருடத்திற்கு சராசரியாக 11,770 மில்லி மீட்டர் அளவு மழை பொழிகிறது.

டுடென்டோ கொலம்பியாவில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இங்கு 1,000-துக்கும்  குறைவான மக்கள் வசிக்கிறார்கள்.

4. க்ராப் ரிவர் (Cropp River):

Highest rainfall in india in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது நியூசிலாந்தில் உள்ள க்ராப் ரிவர் பற்றி தான். இங்கு வருடத்திற்கு சராசரியாக 11,516 மில்லி மீட்டர் அளவு மழை பொழிகிறது. இங்கு 1995-ம் ஆண்டு டிசம்பர் 12 மற்றும் 13 இல் 48 மணி நேரத்தில் 1,049 மில்லி மீட்டர் மழை இங்கு பேய்ந்துள்ளது.

2019 ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 26 ல் இங்கு 48 மணிநேரத்தில் 1,086 மில்லி மீட்டர்கள் மழை பேய்ந்துள்ளது. நியூசிலாந்தில் 48 மணிநேரத்தில் அதிக மழை பெய்தது இதுதான் முதல் முறை.

இதையும் படியுங்கள்=> உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

5. சான் அன்டோனியோ டி யுரேகா (San Antonio de Ureca):

World highest rainfall place in tamil

நாம் இறுதியாக பார்க்க இருப்பது எக்குவடோரியல் கினியா வின் பயோகோ தீவில் உள்ள சான் அன்டோனியோ டி யுரேகா பற்றி தான். இங்கு வருடத்திற்கு சராசரியாக 10,450 மில்லி மீட்டர் அளவு மழை பொழிகிறது.

இங்கு நவம்பரிலிருந்து மார்ச் தவிர மீதமுள்ள மாதங்களில் கடுமையான மழை பெய்யும். மழை இல்லாத பொழுது கடற்கரையில் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடலில் இருந்து கரைக்கு வருவதைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் இங்கு வருகிறார்கள்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement