Countries Where Sun Never Sets in Tamil
பொதுவாக நாட்களை கணக்கில் வைத்து தான் மனிதனின் வாழ்க்கை முறை செயல்படுகிறது. ஒரு நாளில் 24 மணிநேரம் உள்ளது. அதில் முதல் 12 மணிநேரம் சூரிய ஒளியால் சூழப்பட்டு பகலாகவும் அடுத்த 12 மணிநேரம் சூரிய ஒளி இல்லாமல் இரவாக மனிதர்கள் ஓய்வு எடுக்கும் நேரமாகவும் உள்ளது.
ஆனால் பூமியில் சில இடங்களில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் அப்படியே பகலாகவே உள்ளது. அப்படி உள்ள 6 இடங்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
6 Places Where Sun Never Sets in Tamil:
என்னது? வருடத்தில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் இருக்கிறதா? உண்மை தானா? சும்மா சொல்லாதீங்கப்பா என்று நீங்கள் சந்தேகிப்பது புரிகிறது. ஆனால், நீங்கள் சந்தேகிக்க வேண்டிய அவசியமேயில்லை, இந்த செய்தி உண்மையானது தான்.
நாங்கள் கூறியுள்ள குறிப்பிட்ட காலகட்டத்தில் நீங்கள் இந்த 6 இடங்களுக்கும் நேரில் சென்றால் வெறும் பகல் பொழுதை மட்டும் உங்கள் வாழ்நாளில் அனுபவிக்கலாம். அவை எந்தெந்த இடங்கள் என்பதை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்=> உலகில் மிகப்பெரிய 10 நாடுகளின் பட்டியல்..! அது எந்தெந்த நாடுகள் தெரியுமா?
1. நார்வே:
சூரியனே அஸ்தமிக்கதா இடங்களின் பட்டியலில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நார்வே பற்றி தான். ஐரோப்பாவின் வடக்கு பகுதியான நார்வேயில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களுக்கு சூரியன் மறைவதே இல்லை. அதாவது இரவே கிடையாது ஏனெனில் இது ஆர்டிக் பகுதிக்கு மிக அருகில் உள்ளது.
இதன் காரணமாக பூமி சுழன்றாலும் கூட இதன் அட்சில் எந்தவித மாற்றமும் இருக்காது. இதன் காரணமாக கோடைகாலத்திலிருந்து அந்த நாட்டில் சூரியன் 24 மணிநேரமும் காணப்படும்.
2. கனடா:
அடுத்து கனடாவின் வடமேற்குப் பகுதியில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இரண்டு டிகிரிக்கு தொலைவில் நுனாவுட் (Nunavut) என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக சூரிய ஒளியைக் காண்கிறது.
ஆம் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல் அப்படியே பகல் பொழுதாக நீடிக்கிறது. அதேசமயத்தில், குளிர்காலத்தில் இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முழுமையாக இருளால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஐஸ்லாந்து:
கிரேட் பிரிட்டனுக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு என்றால் அது ஐஸ்லாந்து தான். மேலும் இங்கு கொசுக்களே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.
இந்த ஐஸ்லாந்தில் ஜூன் மாதம் முழுவதும் மிட்நைட் சன் என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனை இங்கு காணமுடிகின்றது.
இதையும் படியுங்கள்=> வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்களா..? ஆச்சிரியமாக இருக்கே ..!
4. அலாஸ்கா:
அலாஸ்காவில் உள்ள பாரோ (Barrow) என்ற இடத்திலும் சூரியன் மறைவதில்லை. மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை மாதத்தின் இறுதி வரை இங்கு சூரியன் மறைவதே இல்லை.
இது நவம்பர் தொடக்கத்தில் இருந்து அப்படியே அடுத்த 30 நாட்களுக்கு தலைகீழாகச் செயல்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்தில் சூரியன் உதிக்கவே உதிக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
5. பின்லாந்து:
அடுத்து ஆயிரம் ஏரிகளை கொண்ட தீவுகளின் நிலம் என்று அழைக்கப்படும் பின்லாந்து உள்ள பெரும்பாலான பகுதிகளில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை. அதிலும் குறிப்பாக கோடைக்காலத்தில் தொடர்ச்சியாக 73 நாட்களுக்கு சூரியன் அஸ்தமிப்பது இல்லை.
இந்த 73 நாட்களும் மக்கள் நிலையான பகல்பொழுதை மட்டும் அனுபவிக்கிறார்கள். அதேசமயம், குளிர்காலத்தில் இந்த பகுதி சூரிய ஒளியை பார்க்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
6. ஸ்வீடன்:
இறுதியாக நமது பட்டியலில் இருக்கும் பகுதி ஸ்வீடன் ஆகும். இங்கு மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை நள்ளிரவில் தான் சூரியன் மறையும்.
அதேசமயத்தில் மறைந்த சிறிது நேரத்தில் அதாவது அதிகாலை 4 மணிக்கு எல்லாம் நாட்டில் மீண்டும் சூரியன் உதயமாகிவிடும். ஸ்வீடனில் தொடர்ச்சியான சூரிய ஒளிக்காலம் வருடத்தின் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும்.
இங்கு இருக்கும்போது நீங்கள் நீண்ட சூரிய ஒளி நாட்களை அனுபவிக்க முடியும்.
இதையும் படியுங்கள்=>உலகில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |