உலக சுகாதார அமைப்பின் தலைவர் யார்?

ulaga sugathara amaipin thalaivar yar

உலக சுகாதார அமைப்பின் தலைவர் யார்? | Who is The President of The World Health Organization?

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.. எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு மிக நன்றி. இன்றைய பதிவில் பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். அதாவது உலக சுகாதார அமைப்பை பற்றியும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் யார்? என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உலக சுகாதார அமைப்பு:

உலக சுகாதார அமைப்பு (World Health Organization) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948-யில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

இந்த அமைப்பின் நோக்கம்:

“உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்”. இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் யார்? | Ulaga Sugathara Amaipin Thalaivar Yar

விடை: டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ்

டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் பற்றிய சிறிய குறிப்பு:

டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் மார்ச் 3, 1965 பிறந்தவர். இவர் ஒரு ஒரு எத்தியோப்பிய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக இருந்து வருகிறார்.

அவர் முன்னர் எத்தியோப்பியா அரசாங்கத்தில் 2005 முதல் 2012 வரை சுகாதார அமைச்சராகவும் மற்றும் 2012 முதல் 2016 வரை வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார்.

டெட்ரோசு அஸ்மாரா, எரித்திரியாவில், அதானோம் கெப்ரேயஸ் மற்றும் மெலாசு வெல்டேகாபீர் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது குடும்பமானது டைக்ரே மாகாணத்தின் எண்டெட்ரா அவ்ரஜ்ஜா பகுதியில் தனது ஆதியைக் கொண்டிருந்த காரணத்தால் மலேரியாவால் ஏற்படும் “தேவையற்ற துன்பம் மற்றும் இறப்பு” பற்றி முழுமையாக அறிந்திருந்தார்.

1986 ஆம் ஆண்டில், டெட்ரோஸ் அஸ்மாரா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இளைய பொது சுகாதார நிபுணராக டெர்க்கின் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். மெங்கிஸ்டு ஹைலே மரியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, டெட்ரோஸ் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். 1992-யில் லண்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினிலிருந்து தொற்று நோய்களின் நோயெதிர்ப்புத் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் மலேரியா பரவுதலில் அணைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமுதலாய நலத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil