Ashwagandha Powder Benefits In Tamil
உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் நிறைய வழிகளை உணவு ரீதியாகவும் மருந்து ரீதியாகவும் எடுத்து கொள்கிறோம். உடல் ஆரோக்கியத்திற்க்காகவும் முக அழகு, தோற்ற அழகிற்காவும் நிறைய பேர் ஜிம்முக்கு போவது, யோகா க்ளாஸ் போவது என பல்வேறு முறைகளை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அஸ்வகந்தா எனும் மருத்துவ குணம் கொண்ட பொடியினை பயன்படுத்துகின்றனர். அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மருத்துவ முறையில் பின்பற்றும் ஒரு மூலிகையாகும். அஸ்வகந்தா ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வளரும் ஒரு புதர். இது பல்வேறு பயன்களை உடலுக்கு கொடுக்கின்றது. இது பொதுவாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன அமைதியை தருகின்றது. மேலும் அஸ்வகந்தா பொடியின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.
அஸ்வகந்தா பொடியின் பயன்கள்
- இது ஆற்றல் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக செயல்படுகிறது.
- அஸ்வகந்தா பொடியினை பயன்படுத்துவதன் மூலம் அதிக நினைவாற்றல் தருகிறது. மேலும் அறிவுத்திறனையும் மேம்படுத்துகிறது.
- அஸ்வகந்தா மன அழுத்தத்தை நீக்குகிறது. மன அழுத்தத்தினால் ஏற்பட்ட ஆக்ஸிஜனேற்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது. ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு என்பது அதிக மன அழுத்தத்தினால் இரத்த ஓட்ட அமைப்பும் இருதயமும் பாதிக்கப்படுவதாகும்.
- இது சருமத்தை பளபளக்க செய்கிறது.
- அஸ்வகந்தா தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் திருப்தியான தூக்கத்தை பெறவும் அஷ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது.
- அஸ்வகந்தாவில் இருக்கும் லாக்டோன்கள் உடலில் இருக்கும் கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை குறைக்கிறது. இதனால் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.
- தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து ஹைப்போ தைராடிசத்தை சரியாக நிர்வகிக்கிறது.
அஸ்வகந்தாவினால் ஏற்படும் பக்கவிளைவுகள்
அஸ்வகந்தாவின் பொதுவான பக்க விளைவுகள் என கீழ்காண்பவை கண்டறியப்படுகிறது .
- வாந்தி
- வயிற்று போக்கு
- குமட்டல்
- வயிற்றுவலி
- அதிகமான தூக்கம்
- தலைசுற்றல்
- இருமல் மற்றும் தொண்டையில் கரகரப்பு
- தடிப்புகள்
- மங்கலான பார்வை
- எடை அதிகரிப்பு
- வறண்ட வாய்
மேலும் இது கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவே அஸ்வகந்தாவை சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கர்ப்பம் தரித்தவர்கள், தாய்ப்பால் ஊட்டுபவர்கள் அஸ்வகந்தாவை தவிர்ப்பது நல்லது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை பயன்ப்படுத்தவேண்டாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாக அஸ்வகந்தாவை பயன்படுத்தவேண்டாம்.
நீர்முள்ளி விதை பொடி பயன்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |