Castor Oil Bath Benefits In Tamil
வேலை என்று இப்ப இருக்கும் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் உடல் நோய்வாய் படும்போது மட்டும் ஜூஸ் அடித்து குடிப்பது, சத்தான உணவை சாப்பிடுவது ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்று பணத்தை செலவழிப்பது என செய்கிறார்கள். அதற்கு உடலை எப்போதுமே கவனித்து கொண்டால் ஹாஸ்ப்பிட்டலுக்கு போகவேண்டிய அவசியமே இருக்காது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லா சாப்பிடுங்கள் தினமும் 8 மணிநேரமாவது உறங்குங்கள். உடல் சூடுதான் இப்போ இருக்குற பிரச்சனை. உடல் சூட்டினால் ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது. அதற்கு நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது எல்லோருக்கும் தெரியும் விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை பற்றி தெரியுமா? விளக்கெண்ணெய் குளியல் நன்மை பற்றி பார்ப்போம்.
விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் :
- விளக்கெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கும்போது சருமத்தின் நிறம் மேம்படுகிறது. சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்குகிறது. மூட்டு வலி, உடல் வலி, உடல் சோர்வு கலைப்புகள் சரியாகிறது.
- உடலில் ஏதும் வடு காயங்கள் இருந்தால் விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் வடு காயங்கள் சரியாகிறது.
- விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உங்கள் சருமம் ஈரப்பதமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் போலவே விளக்கெண்ணையும் சருமத்தை மாய்ஸ்சுரைசராக இருக்க செய்கிறது. விளக்கெண்ணெயில் இருக்கும் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து தடுக்கிறது. கோடை காலங்களில் விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் வறட்சியில் இருந்து தடுக்கலாம்.
- உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சரியாகிறது. இது இயற்கையாகவே ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் உடல் உஷ்ணத்தை இது கட்டுப்படுத்துகிறது.
விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை :
- முதலில் 50 ml விளக்கெண்ணெய் எடுத்து கொண்டால் போதும் அதற்கும் அதிகம் சேர்க்க வேண்டாம். முதலில் உச்சந்தலையில் ஆரம்பித்து அதன் பின் உடல் முழுவதும் தேய்த்து கொள்ளுங்கள் கண், வாய் பகுதியை மட்டும் தடவ வேண்டாம். உங்களுக்கு குளிர்ச்சி அதிகம் ஒத்துக்காது என்றால் விளக்கெண்ணெயை கொஞ்சம் சூடேற்றி அதன் பின் தேய்த்து குளிக்கலாம். உடல் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
- விளக்கெண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் 15 நிமிடங்கள் உலர விட்டால் போதும். முதன் முதலில் தேய்த்து குளிக்கும் போது உடல் சற்று சோர்வாக காணப்படும். வேறு எந்த பக்க விளைவுகளையும் உணர மாட்டீர்கள்.
- சளி, ஆஸ்துமா போல் ஏதும் பிரச்சனை இருந்தால் நீங்கள் விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டாம்.
விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் மட்டும் போதாது..! இந்த விஷயம் தெரிஞ்சிருக்கணும்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |