விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் மட்டும் போதாது..! இந்த விஷயம் தெரிஞ்சிருக்கணும்..

Advertisement

Castor Oil Uses

வீட்டில் சமையலுக்கு பல எண்ணெய்களை பயன்படுத்தவோம். அதில் ஒவ்வொரு எண்ணெயும் ஒவ்வொரு மாதிரியான ருசியை தரும். மேலும் ஒவ்வொரு மருத்துவ குணமும் கொண்டது. மருத்துவ குணம் மட்டுமில்லாமல் பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. அதில் இன்றைய பதிவில் விளக்கெண்ணையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விளக்கெண்ணெய் பயன்கள்:

Castor Oil Uses in tamil

ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட இதில் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.

உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. இதனால் தான் நம் முன்னோர்கள் மாதத்தில் ஒரு நாள் குடித்தார்கள்.

 மலசிக்கல் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கிறது. மலசிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு 15 மில்லி லிட்டர் குடித்தால் மலம் ஈசியாக வெயியேறும்.  

தேங்காய் எண்ணெயை தலைல தடவுனா மட்டும் போதுமா..! இந்த விஷயமும் தெரிஞ்சிருக்கணும்..!

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் கட்டி கட்டி கண்டாலோ அல்லது சரியாக சுரக்கவில்லை என்றாலும் ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் முடிக்கு:

விளக்கெண்ணெய் முடிக்கு

 முடி உதிர்வை தடுக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. இதற்கு விளக்கெண்ணெயை முடி முழுவதும் அப்ளை செய்யவும். உங்களின் முடியின் நீளத்தை பொறுத்து விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முடி முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்யவும்.  

பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கும் விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்யவும். இதை பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனை நீங்கும், மேலும் உச்சந்தலையின் ph அளவை அதிகப்படுத்தும்.

தலை முதல் கால் வரை விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்..!

புருவ முடி வளர்ச்க்கும் விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு தடவி காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் புருவ முடி வளர்ச்சி அடையும்.

விளக்கெண்ணெய் முகத்திற்கு எப்படி உதவுகிறது.?

castor oil for face in tamil

உதடுகளை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. இதற்கு 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1/2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் உதட்டில் அப்ளை செய்யவும். இதை பயன்படுத்துவதால் உதடுகளை ஈரப்பதமாகவும், உதட்டை சிவப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கரும்புள்ளிகளை அகற்றுவதற்கு விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெயுடன், சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் மறைந்து விடும். இந்த பேக்கை ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். 

உங்கள பாத்து மத்தவங்க எப்படிங்க இவ்ளோ முடியை வளர்த்தீங்கனு கேட்கிற அளவுக்கு தலைமுடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 

 

Advertisement