தேங்காய் எண்ணெயை தலைல தடவுனா மட்டும் போதுமா..! இந்த விஷயமும் தெரிஞ்சிருக்கணும்..!

Coconut Oil Multi Purpose in Tamil

Coconut Oil Multi Purpose in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நாம் தேங்காய் எண்ணெயின் Multi Purpose பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதற்கு முன் Multi Purpose என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? ஒரு பொருள் ஒரு விஷயத்திற்கு மட்டும் பயன்படாமல் பல விதமாக பயன்படுவதை தான் Multi Purpose என்று சொல்கின்றோம். அதுபோல நாம் தினமும் ஒவ்வொரு பொருளின் Multi Purpose பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தேங்காய் எண்ணெயின் Multi Purpose பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய் பற்றிய தகவல்:

coconut oil multi uses

பொதுவாக தேங்காய் எண்ணெய் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். தேங்காய் எண்ணெய் எப்படி தயாரிக்கப்படுகிறது, அது எதில் இருந்து நமக்கு கிடைக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். பெரும்பாலும் நாம் தேங்காய் எண்ணெயை நாம் தலைமுடிக்கு தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் எத்தனை விதமாக பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி காணலாம் வாங்க..!

முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த:

பொதுவாக முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் தேங்காய் எண்ணெய் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவிசெய்கிறது. மேலும் தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.

பாலில் டீ போட்டு குடிச்சா மட்டும் பத்தாது இந்த விஷயமும் தெரிஞ்சிருக்கணும்

சமையலுக்கு தேங்காய் எண்ணெய்: 

சமையலுக்கு தேங்காய் எண்ணெய்

பெரும்பாலும் நம்மில் பலரும் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது.

மேலும் இதில் அதிக நிறைவுற்ற கொழுப்புச் சத்து இருப்பதால், அதிக வெப்பநிலையுடன் சமைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மற்ற எண்ணெய்களில் சமைக்கும் உணவுகளின் ருசியை விட தேங்காய் எண்ணெயில் சமைக்கும் உணவு தனி சுவையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் நன்மைகள்

சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்:

சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்

நம்மில் பலரும் தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். சருமத்தில் ஏற்படும் வறட்சி போக்க தேங்காய் எண்ணெய் மிகவும் உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி குளித்து வந்தால் முகத்தில் பருக்கள் வருவதை தடுத்து, முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கிறது. அதுபோல கை மற்றும் கால் வறட்சியை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். மேலும் சரும அழகை மேம்படுத்த தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

பற்களை வெண்மையாக்கும் தேங்காய் எண்ணெய்:

பற்களை வெண்மையாக்கும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வாயை சுத்தப்படுத்த உதவும்  ஒரு மவுத்வாஷ் போல  பயன்படுகிறது. இதுபோல நாம் செய்து வந்தால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்  மற்றும் வாய் துர்நாற்றம் குறையும். அதுமட்டுமில்லாமல் பற்களை வெண்மையாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.

குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா

 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்–> உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose