Fruits And Vegetables That You Should Peel Before Eating in Tamil
உடல் ஆரோக்கியத்திற்கு சத்து நிறைந்த பழங்களும் காய்கறிகளும் அவசியமான ஒன்று. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அனைவரும் சத்துநிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும்போது அவற்றின் தோல்களை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டுமா.? தோலுடன் சாப்பிட வேண்டுமா என்ற யோசனை இருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதன் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது என்று பலபேர் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். எனவே சாப்பிடும் முன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் டி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்
Which Fruits and Vegetables Need to be Peeled Before Eating:
அவகோடா பழம்:
அவகோடா பழத்தை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதன் தோல் கடின தன்மை உடையது. மேலும் அவகோடாவின் முழு சத்தும் கிடைக்க வேண்டுமென்றால் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமில்லாமல் இதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் சுவையும் நன்றாக இருக்கும்.
மாம்பழம்:
மாம்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துகளும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மேலும் மாம்பழத் தோலில் Urushiol என்ற தீங்கு விளைவிக்க கூடிய ஒரு கலவை உள்ளது. எனவே மாம்பழத்தை சாப்பிடும் முன்பு அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.
சர்க்கரைவள்ளி கிழங்கு:
இனிப்பு உருளைக்கிழங்கு என சொல்லக்கூடிய சர்க்கரைவள்ளி கிழங்கினை சாப்பிடும் முன் அவற்றின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால் சர்க்கரைவள்ளி கிழங்கின் தோல் கடினமாகவும் நார்ச்சத்து கொண்டதாகவும் இருக்கும். எனவே இதனை தோல் நீக்காமல் சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் குடல் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்..
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்கள் எனப்படும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடும் முன் அவற்றின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இது ஜீரணிக்க கடினமானவை.
பூசணி:
பூசணி காயின் தோல் சாப்பிட கூடிய ஒன்றாக இருந்தாலும் அதன் கடினமான அமைப்பு சமைக்கும்போது அதிக நேரம் எடுப்பதால் பூசணியை சமைக்கும்போது அதன் தோலை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது.
எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |