சுகர் உள்ளவர்கள் எந்த பழம் சாப்பிடலாம் | Sugar Patient Fruits List in Tamil
காய்கறி மற்றும் பழங்கள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் ஒவ்வொரு வகையான நோய்க்கும் ஒவ்வொரு வகையான பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிடு வேண்டும் என்றும் சப்பிய்டா கூடாது என்றும் கூறுவார்கள். அதிலும் சர்க்கரை நோய்க்கு பழங்கள் சாப்பிட கூடாது அப்படி சாப்பிட்டால் சுகரின் அளவு அதிகரிக்கும் என்று சொல்வார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு பழங்களை பார்த்தாலே எச்சில் ஊரும். ஆனால் அதை சாப்பிட முடியவில்லை என்று கவலைப்படுவார்கள்.
இனிமேல் நீங்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால் உங்களுக்கு உகந்த பழங்களை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடிய பழங்கள்:
சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு குறைய இதை சாப்பிடுங்கள்..!
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது, மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள்:
ஆப்பிள் சத்தான பழம் மட்டுமில்லாமல் பசியை தாமதப்படுத்தும். இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
நாவல் பழம்:
நாவல் பழம் இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
கிவி பழத்தில் வைட்டமின் ஏ,சி, ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
கொய்யா பழம்:
கொய்யா பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?
செர்ரி பழம்:
செர்ரி பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின் ஏ, சி, கே போன்ற சத்துக்கள் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
திராட்சை பழம், பேரிக்காய் போன்ற பழங்களும் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்கள்:
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, தர்பூசணி, அன்னாசி போன்ற பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழங்களில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் சாப்பிட கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |