Javvarisi Benefits in Tamil
உணவு பொருட்களில் ஒன்றான ஜவ்வரிசி அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள். இதனை பாயாசம், வடகம் உள்ளிட்ட பல்வேறு சமையல்களில் பயன்படுத்துவார்கள். ஆனால், அதனின் நன்மைகள் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் ஜவ்வரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இப்பதில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஜவ்வரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் போன்ற நம் உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஜவ்வரிசியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஓகே வாருங்கள், ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
Javvarisi Payangal in Tamil:
ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள்:
- கலோரிகள்
- மாவுச்சத்து
- நார்ச்சத்து
- மேக்னீசியம்
- பொட்டாசியம்
- கால்சியம்
- புரதம்
- கொழுப்பு
- இரும்புச்சத்து
இரத்தசோகை நீங்க:
ஜவ்வரிசி நம் உடலில் உள்ள இரத்தசோகையை நீக்கும் ஆற்றல் உள்ளது. எனவே, குழந்தைகள் முதல் பெண்கள் வரை ஜவ்வரிசி சாப்பிடுவதன் மூலம் உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.
உடல் எடை அதிகரிக்க:
ஜவ்வரிசியில் உடல் எடையை அதிகரிக்கக்கூடிய கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே, உடல் எடையை இயற்கையான வழியில் அதிகரிக்க நினைப்பவர்கள் ஜவ்வரிசியை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பசியின்மை நீங்க:
பசியின்மையால் அவதிப்படுபவர்கள் ஜவ்வரியை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதில் பசியினமை நீங்கும். அதாவது, நேரத்திற்கு சாப்பிடாமல் பசியில்லை என்று கூறும் நபர்களுக்கு பசியை தூண்டக்கூடிய மருந்தே என்றே சொல்லலாம்.
அல்சர் குணமாக:
அல்சர் நோயால் வயிற்றில் புண் ஏற்பட்டு முறையாக சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு ஜவ்வரியில் உணவு செய்து கொடுப்பதன் மூலம் அல்சர் நோய் விரைவில் குணமாகும்.
கூடுதல் இரத்தப்போக்கை நிறுத்துகிறது:
மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு கூடுதல் இரத்தப்போக்கு இருக்கும். அத்தகைய காலத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் சிறிதளவு ஜவ்வரிசி சாப்பிடுவதன் மூலம் அதிக இரத்தப்போக்கு நிற்கும்.
சர்க்கரை நோய் நீங்க:
இக்காலத்தில் பெரும்பாலான மனிதர்கள் சர்க்கரை நோய் என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், பல விதமான உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், அரிசிக்கு பதிலாக மாற்று உணவாக ஜவ்வரிசியை உணவில் எடுத்து கொள்ளலாம். ஜவ்வரிசி சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து கொள்கிறது.
சவ்வரிசியை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |