Manjistha in tamil
மஞ்சிஸ்தா ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக திகழ்கிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இதில் இருக்கும் சிறிய பழம் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த தாவரம் 1.5 மீ சராசரியாக வளர்கிறது. இந்த தாவரம் செடி வகையை சார்ந்தது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இது நாட்டு மருந்து கடை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்ஸில் விற்பனை செய்யப்படுகின்றன. இது உடல்நலம் மற்றும் முக அழகிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் விரிவாக மஞ்சிஸ்தாவை பற்றி தெரிந்துகொள்வோம்.
மஞ்சிஸ்தா என்றால் என்ன ?
ரூபியா கார்டிஃ போலியா என இந்தியாவில் அழைக்கப்படும் இந்த வகை தாவர செடி இந்தியில் மஞ்சிஸ்தா என அழைக்கப்படுகிறது. மஞ்சிஸ்தா பெரும்பாலும் மருத்துவத்திற்கு பயன்படும் தாவரமாக இருக்கிறது. இந்த மஞ்சிஸ்தா செடியின் வேர்களை தான் மருத்துவத்திற்கு எடுத்து கொள்கிறார்கள்.
இந்த செடி பெரும்பாலும் தென்னிந்திய இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கீழ் பகுதிகளில் கிடைக்கிறது. இது மருத்துவத்திற்கு மட்டும் இல்லாமல் முக அழகிற்காகவும் பயன்படுத்துகின்றனர். அதிகமாக மஞ்சிஸ்தா வேர் அதன் பயன்கள் பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த பதிவில் மஞ்சிஸ்தா நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
மஞ்சிஸ்தாவின் நன்மைகள்:
- மஞ்சிஸ்தா நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியாக பயன்படுகிறது. காரணம் இது இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைத்து மேலும் அதில் இருக்கும் கசப்பு தன்மை சக்கரையின் அளவை சீராக்குகிறது.
- சொரியாசிஸ் போன்ற தோல் அலர்ஜிகளுக்கும் மஞ்சிஸ்தா மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சிஸ்தாவின் காய்ந்த வேர்கள் அரிப்பிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
- பெண்களுக்கான கருப்பை இரத்தப்போக்கு பிரச்சனைக்கும் மஞ்சிஸ்தா நிவாரணம் அளிக்கிறது. சிறு நீரில் உள்ள கற்களை கரைக்கவும் மஞ்சிஸ்தா பயன்படுத்தப்படுகிறது.
- மஞ்சிஸ்தா காயத்தையும் குணப்படுத்துகிறது. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காயத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கிறது. இது புதிய செல்களை உருவாக்கி காயம் விரைவாக குணமாக உதவுகிறது.
- மஞ்சிஸ்தா முடி உதிர்வதை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. மஞ்சிஸ்தா பொடியை முடியில் பூசுவதன் மூலம் முடி பளபளப்பாக மாறுகிறது. இது முடியின் வறட்சியை நீக்க செய்கிறது. பொடுகினை கட்டுப்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது.
- மஞ்சிஸ்தா கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் செரிமான கோளாறுகளையும் தடுக்கிறது. இதில் காணப்படும் பிட்டா இரத்த சுத்திகரிப்பு தன்மை கல்லீரலை பாதுகாக்கிறது.
- மஞ்சிஸ்தாவில் உள்ள இரத்த சுத்திகரிப்பு தன்மை சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் முகத்தில் காணப்படும் பருக்களை மறைய செய்கிறது. முகம் பளபளப்பாக இருக்க செய்கிறது.
- மஞ்சிஸ்தா கண்ணில் அரிப்பு. எரிச்சல். கண்களில் நீர் வடிதல் போன்றவற்றையும் சரி செய்ய, காஜல் மற்றும் கண்களில் பயன்படுத்தும் மை வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.
- மஞ்சிஸ்தா முடக்கு வாதத்தின் அறிகுறிகளை ஆரம்பத்திலே தடுக்க செய்கிறது. முடக்கு வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி வீக்கங்களை தடுக்கிறது.
மஞ்சிஸ்தாவின் பக்க விளைவுகள்
இவ்வளவு நன்மைகள் அடங்கிய இந்த மருத்துவ குணம் கொண்ட தாவர மஞ்சிஸ்தாவை அளவாக பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதன் அதிகப்படியான பக்க விளைவு சிறுநீர் மற்றும் மலம் ஆரஞ்சி அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
இந்த மூலிகையை உட்கொள்ளும் போது அளவு பார்த்து கவனமாக உட்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் இந்த மருந்தை எடுத்துகொள்ள வேண்டாம். மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உபயோகிக்கவும்.
சிறுநீர் தொற்று அனைத்தையும் சரி செய்வதற்கு இந்த பொடி மட்டும் போதும்..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |