தினமும் ஒழுங்காக சாப்பிடாவிட்டால் உடலில் இதுதான் நடக்கும்..!

What Happens If You Don’t Eat Properly in Tamil

ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் பல காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே, இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது. எனவே ஒரு மனிதன் தினமும் ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What Happens If We Don’t Eat Food Properly in Tamil:

கோபம் உண்டாகும்:

 what happens if you don't eat properly in tamil

ஒரு வேலை சாப்பிடாமல் இருந்தால் கூட மூளையானது நமது பேச்சை கேட்காது. எதை பார்த்தலும் வெறுப்பாகவும் கோபமாகவும் இருக்கும். நாம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழக்கிறது. இதனால் கோபமும் எரிச்சலும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 உணவுகளை மட்டும் சாப்பிடுங்க

ஹார்மோன் மாற்றம்:

 what happens if you don't eat properly for 3 days in tamil

உணவை சாப்பிடாமலோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கார்டிஸோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிஸோல் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு:

 what happens if i don't eat a day in tamil

தினமும் ஒருவேளை உணவை தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலமாகவோ உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது, நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவு வகைகள்

மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படும்:

தொடர்ந்து உணவை சாப்பிடாமல் இருப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைய தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips