Things To Know Before Buying Second Hand Bike
இவ்வுலகில் அனைவரும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களில் ஒன்று வாகனம். அதாவது, பைக், ஸ்கூட்டி மற்றும் கார் போன்றவை மிகவும் அவசியமான பயன்பாட்டு பொருளாக இருக்கிறது. ஆனால், எல்லோராலும் இதுபோன்ற வாகனங்களை வாங்க முடியாது. அதாவது, பைக், ஸ்கூட்டி போன்றவை வாங்குவதற்கு லட்சதிற்கும் மேலாக தொகை தேவைப்படும். அதனால், பெரும்பாலானவர்கள் Second Hand -ல் தான் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். அப்படி Second Hand -ல் பைக் போன்ற வாகனங்களை வாங்கும்போது, என்னென்ன செக் செய்து வாங்க வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக, நாம் எந்தவொரு செயலை செய்வதற்கு முன்பு அதனை பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அதன் பிறகு செய்வது அவசியம். அதேபோல், நீங்கள் Second Hand -ல் வாகனங்களை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த வாகனத்தை பற்றிய முழு விவரங்களையும், தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில், Second Hand -ல் பைக் கார் வாங்கினால் இப்படி செக் செய்து அதன் பிறகு வாங்குங்கள்.
What to Check When Buying Second Hand Bike and Car in Tamil:
செகண்ட் ஹாண்டில் பைக் வாங்குபவர்கள் முதலில் சரிபார்ப்பது வண்டியின் ஆவணங்களை தான். அதாவது, பைக் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். பைக்கின் பதிவுச் சான்றிதழ், பைக் இன்சூரன்ஸ் பாலிசி, மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) ஆகியவற்றை முக்கியமாக பார்த்து பைக்கின்/காரின் அணைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். முக்கியமாக சர்வீசிங் விவரங்களைப் பெறுவது நல்லது.
அடுத்து, வண்டியில் தரத்தை செக் செய்யவும். அதாவது, வண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் முழுமையாக கவனித்து ஏதேனும் சேதமடைந்து இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். மேலும், முக்கியமாக, பைக்கின் மைலேஜ் விவரங்களை பார்க்க வேண்டும். இதுபோன்ற அணைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, டெஸ்ட் ரைடு எடுத்து செக் செய்ய வேண்டும். இறுதியாக பைக் வாங்குவதற்கு ஓகே என்று எண்ணிய பட்சத்தில் நீங்கள் முக்கியமாக செக் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
நீங்கள் வாங்கும் Second Hand வண்டியின் மீது ஏதேனும் கேஷ் இருக்கிறதா என்பதை செக் செய்வது மிகவும் அவசியம். அதாவது, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் சிக்கி இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும்.
பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால் இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க..
How To Check Vehicle Case Online:
முதலில் https://www.digitalpolicecitizenservices.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அப்பக்கத்தில், உங்கள் பெயர், போன் நம்பர், கேப்ட்சா மற்றும் OTP போன்றவை உள்ளிட்டு LOGIN செய்ய வேண்டும்.
அதன் பிறகு, Generate Vehicle NOC என்பதை கிளிக் செய்து நீங்கள் வாங்க நினைக்கும் வாகனத்தின் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். அதாவது, வண்டியின் பெயர், பதிவு எண், என்ஜின் நம்பர் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
விவரங்கள் அனைத்தும் கொடுத்த பிறகு, அந்த வண்டியின் மீது எந்த விதமான வழக்கும் இல்லையென்றால் NOC லெட்டர் வந்து விடும். இதனை வைத்து நீங்கள் நீங்கள் வாங்கும் வாகனத்தின் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |