பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால் இதை தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க..

Advertisement

What Is Bike cc Means

இரு சக்கர வாகனம் வாங்குவதில் குழப்பம் ஏற்படும். எந்த வண்டி வாங்குவது, எந்த கலரில் வாங்குவது, எது மைலேஜ் அதிகம் கொடுக்கும் போன்ற பல குழப்பங்கள் இருக்கும். வண்டி வாங்கும் போது டிசைன், பவர் அவுட்புட், எடை, மைலேஜ் போன்றவற்றை பார்க்கும் போது CC-யும் பார்த்து வாங்குவது முக்கியமானதாக இருக்கிறது. அது என்ன சிசி என்று யோசிப்பீர்கள். வாங்க அதற்கான விளக்கத்தை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

பைக்கில் CC என்பது எதை குறிக்கிறது.?

 பைக்கில் இருக்கும் CC என்பது Cubic capacity அதவாது எஞ்சினின் கொள்ளளவு. இந்த கொள்ளளவு அதிகமானால், அதிகமான எரிபொருளும், காற்றும் உள்ளே சென்று பர்ண் ஆகும். இதனால் அதிக ஆற்றலும் வெளிப்படும். இதனால் அதிக Speed-யும், Torque-யும் பெற முடியும்.  ஆனால் எரிபொருள் அதிகமாக வெளிப்படும் போது குறைவான cc உள்ள எஞ்சினில் ஒப்பிடும் போது அதிக CC-உள்ள எஞ்சின் மைலேஜ் குறைவாக தான் கொடுக்கும். இந்த CC-யின் முக்கியமான மூன்று விஷயம் Enjine Power, Torque, Mileage போன்றவற்றை குறிக்கிறது. 

பைக் வாங்க போறீங்களா.! அப்போ அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க.. 

வண்டியின் CC இன்சூரன்ஸை பாதிக்குமா.?

வண்டியின் CC- அதிகமாக இருந்தால் இன்சூரன்ஸ் தொகையும் அதிகமாகும். காரணம் அதிக பவர் உள்ள வண்டி என்றால் டேமேஜ் அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அதற்கான ரிப்பேர் செய்வதற்கான தொகையும் அதிகமாகும்.

பைக்கின் கன அளவுக்கான அடுக்குகள் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் செலவு
75 சிசி வரை ₹ 482
75 சிசிக்கு மேல் மற்றும் 150 சிசி வரை ₹ 75
150 சிசிக்கு மேல் மற்றும் 350 சிசி வரை ₹1193
350 சிசிக்கு மேல் ₹2323

 

விமானத்தின் மைலேஜ் எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement