வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏன் நோட்டாவிற்கு ஓட்டு போடக்கூடாது..? காரணம் என்ன தெரியுமா..?

Updated On: April 19, 2024 1:57 PM
Follow Us:
 Why Not Vote For Nota In Election in Tamil
---Advertisement---
Advertisement

 Why Not Vote For Nota In Election in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இந்திய குடிமக்கள் அனைவருமே இன்று ஒட்டு போட்டு அவர்களின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அதுபோல பலரும் யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்று தீர்மானித்து ஒட்டு போடுவார்கள். அதுபோல ஒட்டு போடும் போது பல சின்னங்களை நாம் பார்த்திருப்போம். அதில் நோட்டா என்ற இன்னொரு ஆப்சனும் இருக்கும். அது எதற்கு மற்றும் ஏன் நோட்டாவிற்கு ஓட்டு போடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேர்தலில் டெபாசிட் இழப்பது என்றால் என்ன..

நோட்டா ஓட்டு என்றால் என்ன..? 

பொதுவாக நோட்டா என்பது NOTA – None of The Above என்பதாகும். இதன் பொருள் “மேலே உள்ள எவரும் அல்ல” என்பதாகும்.

இந்த நோட்டா என்ற விஷயத்தை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் “நோட்டா” பொத்தானை வைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

ஆகவே வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் பொத்தான் நோட்டா பொத்தான் தான்.

இந்த நோட்டா பொத்தானை 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 சட்டமன்றத் தேர்தல்களில், இது முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. ஒரு சதவீதத்திற்கு அதிகமாக வாக்காளர்கள் இதனை தேர்வு செய்திருந்தனர்.

ஆகவே நீங்கள் ஒரு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரையும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நோட்டாவிற்கு ஒட்டு போடலாம்.

இது தான் நோட்டா ஓட்டு என்று சொல்லப்படுகிறது.

தேர்தல் விதிமுறைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா

நோட்டாவிற்கு ஒட்டு போடுவதால் என்ன பயன்..? 

இதுவரை, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதில் ஒருவேளை நோட்டா வெற்றி பெற்றால், அதாவது வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றால், அதற்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக இருப்பார்.

அதாவது நோட்டா ஓட்டு எண்ணிக்கை அதிகமாக இருந்தால், 2 ஆவது இடத்தில் இருக்கும் வேட்பாளர் ஆட்சி செய்வார். ஆகவே நாம் நோட்டாவிற்கு ஓட்டுபோடுவதால் எந்த பயனும் இல்லை.

எனவே உங்களின் விலைமதிப்பற்ற ஓட்டை நோட்டாவிற்கு போட்டு வீணடிக்காதீர்கள். ஆகவே நோட்டாவிற்கு ஓட்டு போடுவதும் போடாமல் இருப்பதும் ஓன்று தான்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now