Post Office RD 3500 Per Month Investment Plan
நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக சம்பாதிக்கின்ற பணத்தை அன்றைய நாள் தேவைகளுக்கே செலவிட கூடாது. ஏனென்றால் அடுத்தகணம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் நீங்கள் தினமும் 500 ரூபாய் சம்பாதித்தாலும் அதிலிருந்து 100 ரூபாயாவது சேமிப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் முதலீடு திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும். இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை ரெக்கரிங் டெபாசிட் திட்ட விவரம்:
RD திட்டம் என்பது நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை மட்டும் மாதந்தோறும் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை கிடைக்கும்.
இதில் சேமிப்பு தொகை குறைந்தப்பட்சம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
வட்டி விகிதம் என்பது 6.5% வரை அளிக்கப்படுகிறது. இந்த வட்டியானது வருடந்தோறும் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்பட்டாலும் நீங்கள் சேரும் போது என்ன வட்டி விகிதமோ அது தான் 5 வருடம் வரை வழங்கப்படுகிறது.
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் சேமிப்பிற்கான காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 3 வருடமும் அளிக்கப்படுகிறது.
நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை மட்டும் நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அட்டை
- பாஸ்ப்போர்ட்
- ரேஷன் கார்டு
எவ்வளவு கிடைக்கும்:
நீங்கள் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 3500 ரூபாயை மாதந்தோறும் சேமித்து வந்தால் 5 வருடத்தில் மொத்த சேமிப்பு தொகையாக 2,10,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள்.
இந்த தொகைக்கு வட்டி தொகையாக 38,465 ரூபாய் வழங்குவார்கள். எனவே 5 வருடம் கழித்து இந்த திட்டத்தை முடிக்கும் போது 2,48,465 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சேமிப்பது லாபமா நஷ்டமா என்றால் லாபம் தான் என்று சொல்லுவேன். ஏனென்றால் நீங்கள் பணத்தை வீட்டில் சேமித்து வைப்பதன் மூலம் அதற்கு வட்டி தொகை என்பது கிடைக்காது. அதுவே இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது அதற்கு வட்டி தொகை கிடைக்கிறது.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |