தபால் துறையில் 4000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..

Advertisement

Post Office RD 4000 Per Month Investment Plan in tamil

மனிதர்களின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இன்றைய காலத்தில் தேவையை மட்டும் சமாளிக்கவே சம்பாதிக்கின்ற பணம் போதவில்லை. அதனால் நாம் சம்பாதிக்கின்ற பணத்தில் கொஞ்சமாவது எதிர்காலத்திற்காக சேமிப்பது ரொம்ப அவசியமானது.

உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 4000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம் விபரம்:

RD திட்டம் என்பது நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகையினை மட்டும் மாதந்தோறும் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை கிடைக்கும்.

இதில் சேமிப்பு தொகை குறைந்தப்பட்சம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

வட்டி விகிதம் என்பது 6.5% வரை அளிக்கப்படுகிறது. இந்த வட்டியானது வருடந்தோறும் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்பட்டாலும் நீங்கள் சேரும் போது என்ன வட்டி விகிதமோ அது தான் 5 வருடம் வரை வழங்கப்படுகிறது.

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் சேமிப்பிற்கான காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 3 வருடமும் அளிக்கப்படுகிறது.

நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை மட்டும் நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு 

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • வாக்காளர் அட்டை
  • பாஸ்ப்போர்ட்
  • ரேஷன் கார்டு

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

முதிர்வு காலம்  மாத டெபாசிட் தொகை  மொத்த டெபாசிட் தொகை மொத்த வட்டி தொகை  மூன்று மாத வருமானம்
5 வருடம் Rs. 4,000 Rs. 2,40,000 Rs. 43,968 Rs. 2,83,968

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement