தபால் துறை செல்வ மகள் திட்டம்
பெண்களுக்காக அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் அதை பயன்படுத்துகிறவர்கள் குறைவானவர்கள். இன்றைய காலத்தில் ஒரு பவுன் எடுக்க வேண்டும் எடுக்க வேண்டுமென்றால் 3 அல்லது 4 மாதத்தின் சம்பளம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் மொத்த சம்பளத்தையும் வைத்து நகை எடுக்க முடியாது.
அதனால் நீங்கள் சேமிக்கும் பணத்திலிருந்து மாதம் 500 அல்லது 1000 ரூபாவையாவது உங்களின் பெயர்களிலோ அல்லது உங்களின் குழந்தைகளின் பெயர்களிலோ போட வேண்டும். அப்படி நீங்கள் எந்த திட்டத்தில் சேருவது என்று குழப்பமாக இருந்தால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வயது தகுதி:
இந்த திட்டத்தில் சேர விரும்பும் பெண் குழந்தைகளுக்கான வயது வரம்பு ஆனது 10 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆகவே 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைய முடியாது.
டெபாசிட் தொகை:
தபால் துறையில் இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 250 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 1,50,000 ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.
வட்டி:
தற்போதய வட்டி விகிதமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8% அளிக்கப்படுகிறது.
டெபாசிட் காலம்:
சேமிப்பு காலமாக இதற்கு 21 வருடங்கள் இருந்தாலுமே முதல் 15 வருடம் மட்டுமே உங்களுக்கான சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும். ஆனால் மொத்த அசல் தொகையினை 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தான் பெற முடியும்.
இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
கடன் வசதி:
பெண் குழந்தை 18 வயதாகும் போது நீங்கள் சேமித்த தொகையிலிருந்து 50% சேமிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.
எப்போது கணக்கு முடித்து கொள்ளலாம்:
உங்களின் பெண் குழந்தைக்கு 18 வயது ஆனாலோ அல்லது திருமணம் ஆகிவிட்டாலோ கணக்கை முடித்துகொள்ளலாம்.
எவ்வளவு கிடைக்கும்:
இந்த திட்டத்தில் நீங்கள் இந்த ஆண்டு 10,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 2044-ம் ஆண்டு முடிவடையும். அப்போது உங்களுடைய மொத்த சேமிப்பு தொகையானது 1,49,985 ரூபாய் சேமித்திருப்பீர்கள்.
இதற்கு வட்டி தொகையாக 2,98,939 ரூபாய் கிடைக்கும். நீங்கள் கணக்கை முடிக்கும் போது மெச்சூரிட்டி தொகையாக 4,48,924 ரூபாய் கிடைக்கும்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |