Real Estate Vs Mutual Funds in Tamil
மக்கள் முதலீட்டில் சிறந்து எது என்பதை தான் தேடி வருகிறார்கள். சிலருக்கு தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வேறு ஏதாவதில் முதலீடு செய்யலாம் என்பதில் ஆர்வமாக இருப்பதில் இதுவும் ஒன்று. அதில் ஒன்று தான் Real Estate தான் என்று யோசனையில் இருக்கும் போது இடையில் ஒருவர் வந்து இதில் முதலீடு செய்யாதே மியூச்சுவல் பண்டில் முதலீடு செய் என்று குழப்பி விடுவார்கள். ஆகவே எதற்கு இந்த குழப்பம் உங்கள் கையில் தான் உலகமே உள்ளது.
என்னடா அது என்று கேட்கும் ஆர்வம் உள்ளது. உங்கள் போனை தான் சொல்கிறேன். டக்குனு டைப் பண்ணுங்க Real Estate Vs Mutual Funds இரண்டில் எது சிறந்தது என்று உடனே பதில் வரும். சரி இப்போது Real Estate Vs Mutual Funds இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?
Which is Better Investment Real Estate or Mutual Funds in Tamil:
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை. முதலீடு செய்யும் போது அவர்களின் இடத்தில் மதிப்பு காலப்போக்கில் உயரும் என்று நம்பி முதலீடு செய்வார்கள். மதிப்பு இடத்தை மட்டுமே சார்ந்து இருக்காது. அந்த இடத்தில் வளர்ச்சி அதாவது அந்த இடத்தை சுற்றி வளர்ச்சி பெற்றால் மட்டுமே இடத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.
ஆனால் மியூச்சுவல் பண்ட் அப்படி இல்லை கடந்த வருடமாக சிறந்த லாபத்தை கொண்டுள்ளது. மியூச்சுவல் பண்ட்டில் ரிஸ்க் இருந்தாலும் இதில் லாபம் கிடைக்கும்.
முதலீடு:
சுபலமாக முதலீடு செய்ய அதிகமாக உதவுவது மியூச்சுவல் பண்ட் தான். எனவே நடுத்தர மக்களுக்கும் அதிகம் உதவியாக இருப்பதும் மியூச்சுவல் பண்ட் தான். ஆனால் ரியல் எஸ்டேட் அப்படி இல்லை இதில் முதலீடு செய்ய நினைத்தாலும் குறைந்த பணத்தை கொண்டு முதலீடு செய்ய முடியாது. எப்போது செய்தாலும் அது ஒரே முதலீடாகவும் அதிக முதலீடாகவும் தான் இருக்கும்.
விற்பது:
மியூச்சுவல் பண்ட்டை பொறுத்தவரையில் விற்பது பணத்தை எடுப்பது என்ற அதிக நாட்கள் வேலை இருக்காது. மேலும் இருந்தாலும் அது 4 நாட்களுக்குள் கிடைத்துவிடும். மேலும் வழக்குகள் வரை செல்வதற்கு எந்த ஒரு முனைப்பும் இருக்காது.
ஆனால் ரியல் எஸ்டேட் பொறுத்தவரையில் அதனை விற்பதிலிருந்து அது யாருடைய கைக்கு சென்று அதன் மூலம் விற்பவரின் கைக்கு பணம் வருவது என்பது கடினமான சூழ்நிலை தான். அதாவது வழக்குகள் வரை செல்லும் வாய்ப்பு கூட ரியல் எஸ்டேட்டில் ஏற்படும்.
கண்காணிப்பு:
ரியல் எஸ்டேட் ஒரு முறை முதலீடு செய்த பின் அதனை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். கவனிக்க தவறவிட்டால் அது வழக்குகள் வரையில் கூட செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் மியூச்சுவல் பண்ட் அப்படி இல்லை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்தாலும் அதை அப்போ அப்போ ஆன்லைன் மூலம் கண்காணிக்க முடியும்.
லாபம்:
ரியல் எஸ்டேட் முதலீடு என்பது கொஞ்சம் நாட்கள் அதனுடைய மதிப்பு ஏறுவதற்கு தேவைப்படும். அவ்வளவு ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம்.
ஆனால் மியூச்சுவல் பண்ட் அப்படி இல்லை. அதில் லாபம் அதிகரிக்கும் போது உங்களின் பணத்தை உங்களால் எடுத்துக் கொள்ள முடியும். அதில் லாபம் கிடைக்க ரிஸ்க் இல்லை.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |