பள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை
பொதுவாக நாம் ஏதும் கஷ்டத்தில் இருந்தால் மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்து மகிழ்ச்சியடைவோம. இன்றைய கால கட்டத்தில் கணவன்,மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். வேலையில் இருக்கும் மன அழுத்தம், வீட்டில் உள்ள மன அழுத்தம் என சேர்த்து வைத்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் சிரிப்பதையே மறந்து விடுகின்றனர். மனிதன் சந்தோஷமாக இருப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. பிறப்பு என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதனால் இந்த பதிவில் மாணவர்களுக்கான நகைச்சுவைகளை படித்து சிரிப்போம் வாங்க..
ஆசிரியர் மாணவர் நகைச்சுவை:
- ஆசிரியர்: ஏன்டா 20 நாளா ஸ்கூலுக்கு வரல.?
மாணவன்: எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க சார், ஒரு இடத்திற்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதாம்.
2. மாணவன் ஒருவன் வாத்தியார் வைத்திருந்த 100 ரூபாயில் 90 ரூபாயை எடுத்து விட்டான்.
ஆசிரியர்: ஏன்டா 90 ரூபாய் எடுத்த
மாணவன்: நீங்க தான சார் 100-கு 90 எடுக்க சொன்னீங்க..
3. ஆசிரியர்: தண்ணீரோட மூலக்கூறு என்ன
மாணவன்: H2mg canaclcacos3na
ஆசிரியர்: இது என்னடா
மாணவன்: இது கார்ப்பரேஷன் தண்ணீர் சார்
4. ஆசிரியர்: டேய் ஏன்டா தரையில உட்கார்ந்து கணக்கு போட்டுக்கிட்டு இருக்க.
மாணவன்: நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு அதான்.
5. ஆசிரியர்: பரீட்சையில் ஒரு பக்கம் தான் எழுந்திருக்க உனக்கு வெட்கமா இல்ல.
மாணவன்: சிங்கம் சிங்கிள் சீட்ல தான் எழுதும், பன்னிக தான் பக்கம் பக்கமா எழுதும்.
6. ஆசிரியர்: உனக்கு எந்த விலங்கு பிடிக்கும்.?
மாணவன்: பூனை பிடிக்கும் சார்
ஆசிரியர்: ஏன் பூனை பிடிக்கும்.?
மாணவன்: பூனை குறுக்கே வந்தா தான் என் பாட்டி என்ன ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க சார் அதான்.
7. ஆசிரியர்: உன் படிப்புல ரொம்ப அக்கறை வச்சுக்குறது யாரு.?
மாணவன்: எங்க பஸ் கண்டக்டர் சார்
ஆசிரியர்: ஏன்.?
மாணவன்: அவர் தான் தினமும் நீ பாஸ் ஆ பாஷான்னு கேட்குறாரு.
8. ஆசிரியர்: நா இன்னும் ஒரு வருஷத்துல Retired-ஆக போறேன்
மாணவன்: அழுகிறான்
ஆசிரியர்: அழுவாதப்பா நா இன்னும் ஒரு வருஷம் இருப்ப
மாணவன்: நா அழுவுறதே அதுக்கு தான் சார்.
9. ஆசிரியர்: வாழ்க்கையில கஷ்டம்னா என்னனு தெரிஞ்சுக்கோங்கடா, இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
மாணவன்: உங்ககிட்ட படுற கஷ்டத்தை விடவா சார்
10. ஆசிரியர்: ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்குற.
மாணவன்: எங்க அப்பா தான் பதில் தெரியலன்னா முழிச்சுகிட்டு இருக்காதான்னு சொன்னாரு.
உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |