TNPSC Group 1 Syllabus in Tamil Medium pdf Download
TNPSC குரூப் 1 தமிழ் பாடத்திட்டம்: இப்பதிவில் TNPSC Group 1 Syllabus in Tamil Medium pdf Download கொடுத்துள்ளோம். எனவே, TNPSC குரூப் 1 தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதற்கான பாடத்திட்டத்தை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். மேலும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். பொதுவாக, எந்தவொரு தேர்விற்கு தயாராகும் முன்பாக, அத்தேர்விற்கான பாடத்திட்டம் பற்றி அறிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அதிலும் முக்கியமாக அரசு தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் அதற்கான பாடத்திட்டத்தினை தெரிந்து அதற்கேற்றவாறு தேர்விற்கு தயாராக வேண்டும். TNPSC Group 1 பாடத்திட்டத்தினை அறிந்துகொள்வதன் மூலம் Group 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும்.
TNPSC Group 1 Syllabus:
தேர்வின் பெயர் | TNPSC Group 1 |
வகை | TNPSC Group 1 தமிழ் பாடத்திட்டம் |
தேர்வு செயல்முறை |
|
தேர்வு மொழி | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
தேர்வு முறை | ஆஃப்லைன் |
TNPSC Group 1 Syllabus in Tamil:
அலகு – I: பொது அறிவியல்
- அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் – பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
- பேரண்டத்தின் இயல்பு – பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் – பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
- தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.
- உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
- சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.
அலகு – II: நடப்பு நிகழ்வுகள்:
- வரலாறு – அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
- ஆட்சியியல் – இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் – பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் – நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
- புவியியல் – புவியியல் அடையாளங்கள்.
- பொருளாதாரம் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள். அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
அலகு – III: இந்தியாவின் புவியியல்:
- அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
- போக்குவரத்து – தகவல் தொடர்பு.
- சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
- இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.
அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:
- தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
திருக்குறள்:
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
அலகு – IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்:
- தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
- தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
- சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
- தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.
- தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
- பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள். தமிழகத்தில் மின்னாளுகை.
அலகு – X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்:
- சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).
- விகிதம் மற்றும் விகிதாசாரம்.
- தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
- தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.
👉 tnpsc group 1 syllabus in tamil medium pdf download |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |