மின்னல் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
இடி மின்னல் பாதுகாப்பு – மழை காலம் மிகவும் அழகானதாக இருந்தாலும். அழகு என்பதில் அதிக ஆபத்துகளும் நிறைந்துள்ளது என்று பலருக்கு தெரிந்திருக்கும். மலை பெய்யும் போது மின்னல் மின்னுவது, இடி இடிப்பது, காற்று வேகமாக வீசுவது என்று இதுபோன்ற விஷயங்கள் நிகழும். பலர் மின்னல் தாக்கியும், இடி இடித்து இறப்பதை நேரிலோ அல்லது செய்திகள் மூலமாகவோ பார்த்திருப்போம். ஏன் மின்னல் தாக்கியும், இடி இடித்தும் இறக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் மின்னல் அல்லது இடி இடிக்கும் பொது நாம் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய விஷயங்களை பற்றியும் இங்கு படித்தறியலாம் வாங்க.
இடி மின்னல் எவ்வாறு உருவாகிறது?
வானில் இருக்கும் மேக கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று வேகமாக மோதிக்கொள்வதினால் மின்னாற்றல் உருவாகிறது. வானத்தில் அதற்கு கிடைக்கும் சிறிய இடைவெளி வழியாக பூமியை நோக்கி வரும்பொழுது ஏற்படும் விளைவே நமக்கு மின்னலாக தெரிகிறது. அப்படி பூமிக்கு வரும் மின்னல் உயர் மின்னழுத்தமாக ஒரு லட்சம் வோல்டை விட அதிகமாகி பூமியை நோக்கி வருமாம். அப்பொழுது மின்னலானது மனிதர்களையோ, விலங்குகளையோ அல்லது மரங்கள் மீதோ விழுகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இடி மின்னல் வரும்பொழுது நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
இடி மின்னல் வரும்பொழுது திறந்த வெளியில் நிற்க கூடாது.
உடனே கான்கீரிட் கூரையிலான கட்டிடம், உலோகத்தினால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமைடைய வேண்டும்.
குடிசை வீட்டிலோ, மரங்களின் அடியிலோ, பேருந்தின் நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மின்னல் அடிக்கும் வேளைகளில் மின்சாரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.
டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்யூட்டர், அலைபேசி மற்றும் எலக்ரிக்கல் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உபயோகத்தில் இல்லாத போது சுவிட்சிகளை Off செய்து வைக்க வேண்டும்.
மின் வாரியத்தின் மின் மாற்றிகள், துணை மின் நிலையங்களுக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பங்கள் மற்றும் அதனை தாங்கும் கம்பிகளை தொடுவது, மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டுவது இது போன்ற செயல்களை செய்ய கூடாது.
மின்சாரத்தால் தீ விபத்து ஏற்ப்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை Off செய்துவிடுவோம். ஆனால் அந்த தீயை நாம் தண்ணீரால் அணைக்க கூடாது. காய்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி, காரியமில்லை வாயு தீயணைப்பான்கள் இவற்றை கொண்டு தான் அந்த தீயை அணைக்க வேண்டும்.
மின்னல் ஒருவரை தாக்கினால் என்ன செய்ய வேண்டும்?
மின்னல் ஒருவரை தாக்கிவிட்டால் உடனே மருத்துவரை அழைக்க வேண்டும். மின்னல் தாக்கிய ஒருவரை தொடுவதால் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாது. ஒரு நபரை மின்னல் தாக்கிய பிறகு அவர் உடன்பில் எந்த மின் சக்தியும் இருக்காது. ஆக மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் நாடி துடிப்பை முதலில் சோதிக்க வேண்டும். முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே அவர்களுக்கு முதலுதவி கொடுக்க வேண்டும்.
பொதுவாக ஒருவரை மின்னல் தாக்கும் பொழுது தலைவழியாக மின்சாரம் இரங்கி கால் வழியாக மின்சாரம் வெளியே சென்றுவிடும். இதன் காரணமாக அந்த நபரின் தலை மற்றும் கால் எரிந்து கருகிவிடும்.
மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு எலும்பு உடைத்தல், காது கேளாமை, பார்வை இழப்பு ஏற்படும் உடனே இதனை கவனிக்க வேண்டும்.
உடலில் நேரடியாக மின்சாரம் நுழையும் உலோகங்கள், குடை, மொபைல் போன்றவற்றை அந்த சமையத்தில் உபயோகிக்க கூடாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்
இடி இடிக்கும் போது ஏன் மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்..?
மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Interesting information |