இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307-யின் விளக்கம் | 307 IPC in Tamil

307 IPC in Tamil

இந்திய தண்டனை சட்டம் 307 | 307 IPC in Tamil

307 IPC in Tamil:- வணக்கம் நண்பர்களே.. பொதுவாக பலருக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் நிறைய இருக்கிறது. இதை பற்றி வழக்கறிங்கர்களுக்கு தான் நிறைய தெரிந்திருக்கும். இருந்தாலும் நாம் சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது ஒன்று தவறு இல்லை. அப்பொழுது தான் சமூகத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழும்போது அந்த பிரச்சனையை சட்டம் வழியாக மிக சரியான முறையில் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சட்டத்தை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வோம். அதற்கு எங்கள் பொதுநலம். காம் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இன்றைய பதிவில் IPC Section 3047 என்றால் என்ன?, இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்திய தண்டனை சட்டம் 307 என்றால் என்ன? – IPC Section 307 in Tamil:

ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம் சம்பவிக்கு என்ற தெளிவுடன் செயல் செய்யப்பட்டால், அது செய்யப்படும் சூழ்நிலையை அனுசரித்துக் கொலைக் குற்றம் செய்வதற்கான முயற்சி என்று முடிவாக்கப்படுகிறது. இதற்கு காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

அந்த குற்ற முயற்சியால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அல்லது இதற்குமுன் சொல்லப்பட்டதைப்போல சிறைக்காவல் தண்டனை விதிக்கப்படும். இந்த பிரிவின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் காவலில் இருக்கும் பொழுது குற்றம் புரிந்து, அதனால் யாருக்காவது காயம் நேரிட்டால் அந்த கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

உதாரணம்: ஒரு குழந்தையைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் அதனை யாருமில்லாத ஓர் இடத்தில் போட்டுவிடுகின்றனர். அதனால் அந்தக் குழந்தை மரணம் அடையாவிட்டால், குழந்தையை அங்கே போட்டவன், இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறான்.

EP KO 306 Section in Tamil
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com