இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 | 294 B IPC in tamil

294 B IPC in Tamil

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 | 294 B IPC in Tamil

Section 294 b IPC in Tamil:- வணக்கம் வாசகர்களே.. பொதுவாக நம்மில் பலருக்கு சட்டம் பற்றி அவ்வளவு பெரிதாக தெரியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் நிறைய இருக்கிறது. இதை பற்றி வழக்கறிங்கர்களுக்கு தான் நிறைய தெரியும். இருந்தாலும் நாம் சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது ஒன்று தவறு இல்லை. அப்பொழுது தான் சமூகத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழும்போது அந்த பிரச்சனையை சட்டம் வழியாக மிக சரியான முறையில் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சட்டத்தை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வோம். அதற்கு எங்கள் பொதுநலம். காம் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இன்றைய பதிவில் IPC Section 294 என்றால் என்ன?, இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்திய தண்டனை சட்டம் 294 B – 294 B IPC in Tamil:

பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள் எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்:- (a) ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஆபாசச் செயலைச் செய்தால் அல்லது (b) ஏதாவதொரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவதொரு ஆபாசமான பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளைப் பாடினால், உச்சரித்தால் அல்லது கூறினால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

EP KO 306 Section in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com