இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 – 420 Meaning in Tamil
420 IPC in Tamil:- சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இத்தகைய சட்டத்தில் நிறைய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளும் ஒவ்வொருவகையான குற்றத்திற்கு தண்டைனையும் அபராதமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் IPC Section 420 என்றால் என்ன?, இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
இந்திய தண்டனை சட்டம் 420 – 420 IPC in Tamil:
ஒவ்வொரு குற்றத்திற்கு ஒவ்வொரு சட்டங்கள் இருக்கிறது. அதில் இந்த சட்டமானது மோசடிக் குற்றங்களை தண்டிப்பதற்கான சட்டமாக இருக்கிறது.
ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தாலும் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும் அல்லது மதிப்புள்ள காப்பீடாகக் கையெழுத்திடப்பட்டு முத்திரை இட்டுப் பயன்படுத்துவதற்கும் பொருளை அவ்வாறு உருவாக்க மாற்ற அல்லது அளிக்கத்தக்க செயல் புரியும்படி செய்தாலும் அத்தகைய வஞ்சனை புரிந்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு எடுத்துக்காட்டு:
வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் பெற்றுவிட்டு தப்பித்தல்
வங்கி கடனை மோசடி செய்வது
போலி ஆவணங்களை வழங்கி பணம் சம்பாதித்தல்
மேல் கூறியுள்ள தவறுகள் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் வழங்கப்படும்.
தொடர்புடைய பதிவுகள்..! |
1 இந்திய தண்டனை சட்டம் 307 |
2 இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு |
3 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |