மன்னிப்பு கடிதம் எழுதும் முறை
பள்ளியில் படிக்கும் பொது விடுப்பு விண்ணப்பம் எழுதிருப்போம், அதன் பிறகு கல்லூரி படிக்கும் போது எழுதிருப்போம். பொதுவாக கடிதங்களில் பல வகைகள் உள்ளது. விடுப்பு விண்ணப்பம், போலீஸ் புகார் கடிதம், ராஜினாமா கடிதம் என பலவகை உள்ளது. ஒவ்வொரு கடிதத்திற்கு ஒவ்வொரு Format உள்ளது. அதனை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த format-யை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் போனில் தான் டைப் செய்து தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மன்னிப்பு கடிதத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மன்னிப்புக் கடிதம் எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள்:
நீங்கள் எழுதும் மன்னிப்பு கடிதமானது நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் உண்மையாகவே வருத்தத்தை தெரிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பிரச்சனையின் பொறுப்பை முழுமையாக ஏற்று கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அந்த பிரச்சனையின் போது என்ன நடந்ததொ அதை கூறுங்கள். ஆனால் அதனை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.
பிரச்சனைக்கான தீர்வை பற்றி கூறுங்கள். நீங்கள் மன்னிப்பை உண்மையாக கேட்கிறீர்கள் என்பதை மற்றவருக்கு விளக்குவதற்கு வார்த்தைகளால் கூற வேண்டும்.
புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பித்தல் கடிதம் எழுவது எப்படி..?
மன்னிப்பு கடிதம் வடிவம்:
அனுப்புனர் முகவரி
தேதி
பெறுநரின் முகவரி
பொருள்: __________க்கான மன்னிப்புக் கடிதம்
வணக்கம்,
கடிதத்தின் உள்ளடக்கம்:
முதலில் மன்னிப்பை எழுத வேண்டும், அதன் பிறகு பிரச்சனைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். உங்களால் முடிந்தால் என்ன பிரச்சனை நடந்தது என்பதை தெளிவாகவும், விரிவாகவும் கூறலாம். பிரச்சனையினால் ஏற்பட்ட தவறினை சரி செய்வதற்காக எடுக்கப்பட்ட ஸ்டெப்களை கூறலாம். மேலும் இது போல வேறு எந்த தவறும் நடக்காது என்று முழு பொறுப்பேற்று உறுதியளிக்க வேண்டும்.
நன்றி,
அனுப்புனர் பெயர்
அனுப்புநரின் கையொப்பம்
காவல்துறை புகார் கடிதம் மாதிரி
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |