தமிழ் புத்தாண்டு என்பதன் வேறு பெயர்கள் என்ன தெரியுமா..?

Advertisement

Tamil Puthandu Veru Peyargal in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் தமிழ் புத்தாண்டின் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து நாம் பேசும் வார்த்தைகள் வரை ஒவ்வொன்றிற்கும் ஒன்றுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கு இருக்கும் பல்வேறு பெயர்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒன்றாக தெரிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்று நாம் தமிழ் புத்தாண்டு என்பதன் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி உங்களுக்கு தமிழ் புத்தாண்டின் வேறு பெயர்கள் என்னவென்று தெரியுமா..? தெரியவில்லை, அதை பற்றி விரிவாக தற்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

புத்தாண்டில் எதை தொட்டாலும் வெற்றி.. அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார்..

தமிழ் புத்தாண்டு வேறு சொல்:

பொதுவாக சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பிரம்ம தேவர் இந்த நாளில் தான் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதுபோல தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தான் சித்திரை புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் எல்லாம் கட்டி ரொம்பவும் விமர்ச்சியாக கொண்டாடுவார்கள்.

அதுபோல நாம் அனைவருமே இந்த தமிழ் புத்தாண்டு என்பதை சித்திரை புத்தாண்டு என்று கூறியிருப்போம். ஆனால் இந்த தமிழ் புத்தாண்டு என்பதற்கு வேறு பெயர்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை கீழ் காண்போம்.

தமிழ் புத்தாண்டு 2024 தேதி மற்றும் நேரம்..

தமிழ் புத்தாண்டு வேறு பெயர்கள்: 

  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வருடப்பிறப்பு
  • சித்திரை பிறப்பு
  • சித்திரை விஷூ
  • சித்திரைக் கனி
  • சங்கராந்தி

இதுபோல தமிழர்களின் தமிழ் புத்தாண்டை வேறு வேறு பெயர்களை சொல்லி கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் புத்தாண்டு வரலாறு

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement