முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வெறும் 30 நாட்கள் மட்டுமே போதும்..!

Advertisement

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் முடி என்பது எவ்வளவு முக்கியத்துவம் என ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமே தெரியும். அந்த வகையில் நம் முன்னோர்களின் காலத்தை தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் முடி உதிர்வு, இளநரை, பொடுகு மற்றும் முன் வழுக்கை என இத்தகைய பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகிறது. இதன் படி பார்த்தால் இதற்கான காரணமாக அமைவது நம்முடைய சுற்றுசூழலும், நாம் செய்யும் சிறு சிறு தவறுகளினாலும் தான் முடி உதிர்வு என்பது அதிகமாக காணப்படுகிறது.

அந்த வகையில் பெரும்பாலும் யாரும் இந்த பிரச்சனையினை எல்லாம் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்ட பிறகே கவனிக்கிறார்கள். சரி விடுங்கள் எவ்வளவு தான் முடி உதிர்வு பிரச்சனையினை பற்றி பேசி கொண்டிருப்பது. இப்போது அதற்கான தீர்வு என்ன இழந்த முடியினை மீண்டும் எப்படி 30 நாட்களில் வளர வைப்பது என இந்த பதிவின் வாயிலாக விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

30 Days Hair Growth Challenge in Tamil:

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

உங்களது முடியினை வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க இயற்கையான முறையில் ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை முதலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. வெந்தய பொடி- 2 ஸ்பூன்
  2. ஆளி விதை- 3 ஸ்பூன்
  3. வெங்காயச்சாறு- 1 ஸ்பூன்

இப்போது 3 ஸ்பூன் ஆளி விதை மற்றும் 2 ஸ்பூன் வெந்தய பொடியினை சேர்த்து அதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து அப்படியே இரவு முழுவது ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் ஒரு காட்டன் துணியில் கலந்து வைத்துள்ள ஜெல்லை வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது அந்த ஜெல்லுடன் 1 ஸ்பூன் வெங்காய சாற்றை சேர்த்து கலந்தால் உங்களுக்கு ஹேர் பேக் தயார் ஆகிவிடும்.

பயன்படுத்தும் முறை:

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும் உங்களது முடி வேகமாக அடர்த்தியாகவும், நீளமாகவும் விரைவில் வளர ஆரம்பிக்கும்.

நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement