Hair Growth Hair Pack in Tamil
முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். ஆனால் இதற்கான முயற்சிகளாக நாம் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களையும், ஷாம்புகளையும் தான் பயன்படுத்துகிறோம். இதனால் முடி வளர்ச்சி அவ்வப்போது அதிகரித்தாலும் நாளடைவில் முடி உதிர்வு ஏற்படும். இதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது நல்லது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த கூடிய ஹேர் பேக்கை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஹேர் பேக்:
வாழைப்பழம் மற்றும் தேன்:
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் தலை முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தலைமுடி வலிமையாக வளர்வதற்கு உதவுகிறது.
ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும், இதனுடன் தேன் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலையை அலசி கொள்ளவும். இது போல் நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.
நீங்களே ஏப்புரா இவ்வளவு முடி வளந்துனு ஆச்சரியப்படுற அளவுக்கு முடி வளர மிளகு போதும்
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்:
முட்டையில் புரோட்டீன்கள், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்களானது முடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது. ஆலிவ் ஆயிலில்ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை புதிய முடியை வளர்வதற்கு உதவுகிறது.
உங்க முகம் நிலவுடனே போட்டி போடுகின்ற அளவுக்கு பளபளப்பாக மாற பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்
ஒரு பவுலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ளவும், அதனுடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.இந்த பேக்கை தலைமுடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு லேசான ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் தான் ரிசல்ட்டை பெற முடியும்.
வெந்தய பேக்:
வெந்தயமானது முடியின் வளர்ச்சிக்காகவும், முடி உதிர்வை எதிர்த்து போராடுவதற்கும் உதவுகிறது. இதற்கு உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீர் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்குகளில் ஏதாவது ஒரு பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே முடியின் வளர்ச்சியை காணலாம்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…
இந்த முடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமானு உங்கள கேட்க வைக்க இதை மட்டும் செய்யுங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |