How To Do Waxing at Home in Tamil
வேக்ஸிங் என்பது உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் ஒன்றாகும். இதற்கு பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துள்ளது. இருப்பினும் உடம்பில் உள்ள தேவையற்ற முடியை நீக்குவதற்கு பெரும்பாலான பெண்கள் பியூட்டி பார்லருக்கு செல்வார்கள். அதிக பணத்தை செலவிட்டு பார்லரில் வேக்ஸிங் செய்வார்கள். ஆனால் வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே வேக்ஸிங் செய்யலாம். அவற்றை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது பெண்கள் வீட்டிலே குறைந்த செலவில் வேக்ஸிங் எப்படி செய்வது..? அதனை எப்படி பயன்படுத்துவது..? மற்றும் வேக்ஸிங் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
How to do Waxing at Home With Sugar in Tamil:
வேக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- சர்க்கரை- 2 கப்
- எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டீஸ்பூன்
- உப்பு- 1 டீஸ்பூன்
வேக்ஸ் தயாரிக்கும் முறை:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து கொள்ளவும். இதில் சர்க்கரை, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
பார்லர் போகாமலே ட்ரையா இருக்குற உங்க முடியை வீட்டிலே Smoothening செய்யலாம்.. எப்படி தெரியுமா..
ஸ்டேப் -2
இப்போது அடுப்பை குறைவான தீயில் வைத்து பொருட்களை நன்றாக கலந்து விடவும். அதாவது சர்க்கரை உருகி தேன் பதத்திற்கு வரும்வரை கலந்து விடவும்.
ஸ்டேப் -3
தேன் பதத்திற்கு வந்ததும் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு ஒரு கிண்ணத்தில் அல்லது பாட்டிலில் பாகினை மாற்றிக்கொள்ளவும்.
அவ்வளவு தான் இப்போது வேக்ஸ் தயார்..!
பயன்படுத்தும் முறை:
வேக்ஸிங் செய்வதற்கு முன் முதலில் கை அல்லது கால்களில் பவுடர் போட்டுக்கொள்ளவும்.
பிறகு, வேக்ஸிங் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக் வைத்து வேக்ஸை தடவி கொள்ளவும்.
இப்போது கை அல்லது கால்களில் முடி இருக்கும் இடத்தில் வேக்ஸ் ஸ்ட்ரிப்பை ஒட்டி எடுத்தால் தேவையற்ற முடி அனைத்தும் வந்துவிடும்.
பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி
வேக்ஸிங் செய்த பிறகு செய்ய வேண்டியவை:
வேக்ஸிங் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் கிரீம் தடவ வேண்டும்.
வேக்ஸிங் செய்த பிறகு இறுக்கமான ஆடைகளை அணிவதை தடுக்க வேண்டும். காட்டன் துணிகளை அணிவது நல்லது.
வேக்ஸிங் செய்த பிறகு அதிக வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |