How To Get Rid of Double Chin Naturally in Tamil
முகத்தின் அழகை கெடுக்கக்கூடிய பல பிரச்சனைகள் நம் முகத்தில் தோன்றுகிறது. அவற்றில் ஒன்று தான் டபுள் சின் (இரட்டை தாடை). இரட்டை தாடை என்பது முக தாடைக்கு கீழே மற்றொரு தாடை தோன்றும். இதனால் இரண்டு அடுக்கு போன்ற தோற்றம் இருக்கும். வயதாகும்போது அல்லது எடை அதிகரிக்கும்போது இரட்டை கன்னம் மிகவும் தெளிவாகத் தெரியும். இதனால் முகத்தின் அழகே கெட்டுவிடும்.
ஆகையால், Double Chin உள்ளவர்கள் முறையான முக பயிர்சிக்களை செய்து வர வேண்டும். அதுமட்டுமில்லாமல், தாடையை சுற்றியிக்கும் கொழுப்பினை குறைக்கவும் இறுக்கமாக செய்யவும் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அவற்றைன் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies For Double Chin Fast in Tamil:
Home Remedy -1
தேவையான பொருட்கள்:
- முட்டையின் வெள்ளைக்கரு – சிறிதளவு
- தேன் – 1 ஸ்பூன்
- பால் – 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில், ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை இரட்டை தாடையின் மேல் அப்ளை செய்து உலர விடுங்கள். அதன் பிறகு, தண்ணீரை கொண்டு நன்கு கழுவி துடைத்து விடுங்கள்.
முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் பால் ஆகியவை சருமத்தை இறுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால், இது இரட்டை தாடையை குறைக்க உதவுகிறது.
கன்னத்தில் சதை போட என்ன செய்ய வேண்டும்.?
Home Remedy -2
1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து, லேசாக சூடாக்கி கொள்ளுங்கள். இதனை தாடை மற்றும் கழுத்தில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் தினமும் தொடர்ந்து வந்தால் இரட்டை தாடை குறையும்.
Home Remedy -3
ஒரு டீஸ்பூன் கிரீன் டீயை தண்ணீரில் காய்ச்சி, அதில் ஒரு துளி தேன் சேர்த்து,அருந்த வேண்டும். இவ்வாறு நீங்கள் 1 மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |