முடி நீளமாக வளர | Long Hair Growth Oil Tips in Tamil
ஹலோ நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆண்கள் இதில் அந்தளவுக்கு ஆர்வம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி பெண்கள் அனைவருக்கும் இருக்க கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது நீளமாக முடி வளர்வது தான். இதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. எனேவ இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்க..! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
Long Hair Growth Oil Tips in Tamil:
- கருவேப்பிலை
- தேங்காய் எண்ணெய்
- கருஞ்சீரகம்
நாம் இன்று முடியின் வளர்ச்சிக்கு எடுத்து கொள்ளும் பொருள் தான் கருவேப்பிலை. இதில் இருக்கும் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். கருவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் அதேபோல கருமையாகவும் வளர செய்கிறது. இதுபோல தான் கருஞ்சீரகமும். முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே இந்த 2 பொருட்களையும் தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும் |
மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:
இப்போது ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். அதில் நாம் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கருஞ்சீரகம் இவற்றை சேர்த்து கொள்ளவும். பின் தண்ணீருக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் கொதித்து நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் வடிகட்டி வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் முடி அடர்தியாகவும் நீளமாகவும் வளரும்.
👉தலையில் இருக்கும் பொடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |