உதடுகள் வறண்டு போவதை தடுக்க
பொதுவாக நம்முடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். இதற்காக பல கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உதடுகள் அவ்வப்போது நன்றாக இருக்கலாம், ஆனால் நாளடைவில் உதட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதுவும் இந்த பனிக்காலத்தில் உதடானது வறண்டு போகிவிடும், இதனை தடுப்பதற்கு அதிகமாக தண்ணீர் கொடுக்க வேண்டும், வேறு என்ன செய்ய வேண்டும் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க மற்றும் உதடுகள் சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உதடுகள் வறண்டு போகாமல் இருக்க:
தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
உதடுகளை அடிக்கடி தொட்டு கொண்டே இருப்பார்கள், இதனை தவிர்க்க வேண்டும்.
உதடுகள் வறண்டு தோலை உரிந்து வரும் போது அதனை எடுக்க கூடாது.
லிப் பாம் அல்லது மாய்ஸ்டரைஸரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவுவதை பழக்கமாக வைத்து கொள்ளவும்.
கற்றாழை ஜெல் அல்லது வெண்ணைய் போன்ற பொருட்களை உதட்டில் தடவலாம், இதனால் உதடு வறண்டு போவதை தடுக்கலாம்.
கரும்புள்ளி மறைய பாட்டி சொன்னது இது தான் ட்ரை பண்ணி பாருங்க..
உதடு சிவப்பாக மாற:
ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதில் பீட்ரூட் ஜூஸ், பால், தேன் என மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இதனை உதட்டில் தடவி 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு உதட்டை கழுவ வேண்டும். இது போல தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.
ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதனை தினமும் உதடுகளின் மேல் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதனால் உதடு இயற்கையாவே சிவப்பாக மாறிவிடும். மேல் கூறப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தி வந்தாலே உதடு சிவப்பாக மாறிவிடும்.
முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |