கோடை காலத்திலும் உங்களின் சருமம் பொலிவுடன் காட்சியளிக்க அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

Tips for Glowing Skin Naturally in Tamil

பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே நாம் அனைவருக்குமே மிகவும் கஷ்டமாக இருக்கும். அதாவது கோடை கால வெப்பம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக நமது சருமம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அதிலும் இன்றைய சூழலில் மிகவும் அதிகமான வெப்பம் மற்றும் மாசுபாடு உள்ளது. இதனால் நமது சருமம் மிக மிக பொலிவிழந்து காணப்படும். அதனை சரி செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வர என்ன செய்வது என்று நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் நமக்கு சரியான பலனை அளித்ததா என்றால் நாம் சற்று சிந்தனை தான் செய்வோம்.

ஆனால் அதற்கான பதில் நமக்கு தெரியாது. எனவே தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் சருமத்தை எவ்வாறு பொழிவுபடுத்துவது என்பதற்கான ஒரு குறிப்பினை பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to make your Skin Glow Naturally at Home in Tamil:

Tips for glowing skin homemade in tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் சருமத்தை எவ்வாறு பொழிவுபடுத்துவது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு நமக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. அரிசி தண்ணீர் – 1 கப் 
  2. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  4. ஆவாரம்பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன் 
  5. ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன் 

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அரிசி தண்ணீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கடலை மாவினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஆவாரம்பூ பொடியை கலக்கவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை கலந்து கொள்ளுங்கள்.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்

ரோஸ் வாட்டரை சேர்க்கவும்:

அதனுடனே 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள்.

கிளிசரினை கலந்து கொள்ளவும்:

இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி. குளிர்சாதன பெட்டியின் உரைப்பானில் 2 முதல் 3 மணி நேரங்கள் வைத்து நன்கு உறைய வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அந்த ஐஸ் கியூப்களை எடுத்து உங்கள் சருமத்தில் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெற ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

உங்க தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் சூப்பரான மற்றும் எளிமையான ஒரே ஒரு தீர்வு இது தாங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement