உங்க தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் சூப்பரான மற்றும் எளிமையான ஒரே ஒரு தீர்வு இது தாங்க..!

Advertisement

Daily Hair Care Routine in Tamil

இன்றைய சூழலில் உள்ள வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் நமது தலை முடி மிகவும் பாதிப்படைகிறது என்று நம்மில் பலரும் கவலைப்படுவோம். ஆனால் நமது தலைமுடியை சரியாக பராமரித்து கொள்வதற்கு இன்றைய அவசர சூழலில் நமக்கு நேரம் தான் கிடைக்கவில்லை. அதனால் நாம் மிகவும் எளிமையான மற்றும் விரைவில் பலன் தரக்கூடிய வழிகளை தேடி கொண்டிருப்போம். அதனால் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான குறிப்புகளை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் நமது தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் தீர்வாக அமையும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Care Tips at Home in Tamil:

Hair Care Tips at Home in Tamil

இயற்கையான முறையில் நமது தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் தீர்வாக அமையும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கருஞ்சீரக பொடி – 2 டீஸ்பூன் 
  2. வெந்தயப்பொடி – 2 டீஸ்பூன் 
  3. கருவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன் 
  4. நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன் 
  5. கடுகு எண்ணெய் – 200 மி.லி 

வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 200 மி.லி கடுகு எண்ணெயை சேர்த்து லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

கருஞ்சீரக பொடியை சேர்க்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை சேர்த்து கொள்ளுங்கள். கருஞ்சீரக பொடி நமது தலை முடியின் நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

வெந்தயப்பொடியை கலக்கவும்:

அடுத்து அதனுடனே 2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து கொள்ளுங்கள். வெந்தயப்பொடி நமது உடல் சூட்டை போக்க உதவும்.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்

கருவேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளவும்:

இப்பொழுது அதனுடன் 2 டீஸ்பூன் கருவேப்பிலை பொடியை கலந்து கொள்ளுங்கள். கருவேப்பிலை பொடி நமது தலை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

நெல்லிக்காய் பொடியை கலந்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியையும்  கலந்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் இதனை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் தலைக்கு தடவி வருவதன் மூலம் உங்க தலை முடி பிரச்சனைகள் அனைத்து நீங்குவதை நீங்களே காணலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement