1/2 kg Chicken Chukka Recipe Ingredients
சிக்கன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் சிலருக்கு சிக்கன் என்ற வார்த்தையினை கேட்டலே போதும் உடனே வாங்கி சப்பிட்டே ஆகா வேண்டும் என்ற ஆசை வந்து விடும். இவ்வாறு ஆசை வந்தவுடன் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் கிரேவி, சிக்கன் சுக்கா, சிக்கன் வறுவல் என இவற்றை எல்லாம் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிலும் ஒரு சிலர் சிக்கன் குழம்பையும் கடையில் தான் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். ஏனென்றால் இத்தகைய ரெசிபியை செய்ய என்னென்ன பொருட்கள் எந்த அளவில் வேண்டும் தெரியாமல் இருப்பதே காரணமாக உள்ளது. ஆனால் இது மாதிரி தெரியவில்லை என்றால் அதனை அப்படியே விடாமல் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் இன்று 1/2 கிலோ சிக்கனில் சிக்கன் சுக்கா செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
4 நபருக்கு சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
பொருட்களின் பெயர் |
தேவைப்படும் அளவு |
சிக்கன் |
1/2 கிலோ |
வெங்காயம் |
2 மீடியம் அளவு |
தக்காளி |
2 மீடியம் அளவு |
பச்சை மிளகாய் |
5 |
இஞ்சி பூண்டு பேஸ்ட் |
1 ஸ்பூன் |
தயிர் |
1/2 கப் |
மஞ்சள் தூள் |
1/2 ஸ்பூன் |
எலுமிச்சை சாறு |
1/2 ஸ்பூன் |
சீரகம் |
1 ஸ்பூன் |
மிளகு தூள் |
1/2 ஸ்பூன் |
உப்பு |
தேவையான அளவு |
கறிவேப்பிலை |
தேவையான அளவு |
சமையல் எண்ணெய் |
தேவையான அளவு |
வறுத்த மசாலா அரைக்க தேவையான பொருள்:
பொருட்களின் பெயர் |
தேவைப்படும் அளவு |
முழு மல்லி |
1 ஸ்பூன் |
காய்ந்த மிளகாய் |
8 |
சோம்பு |
1/2 ஸ்பூன் |
தேங்காய் |
1/4 கப் |
பூண்டு |
5 பல் |
இப்போது மேலே அட்டவணையில் சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்றும் அதற்கான அளவு எவ்வளவு என்றும் பார்த்துள்ளோம். அடுத்து அதனை எவ்வாறு செய்வது என்று தெரிந்துகொள்ள கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.