10 பேருக்கு இட்லி செய்ய எவ்வளவு அரிசி உளுந்து தேவைப்படும்
பொதுவாக பெரும்பாலானவர்கள் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவது டிபன் ஆக தான் இருக்கும். இந்த டிபனில் இட்லி, தோசை, சப்பாத்தி தான் அதிகமாக சாப்பிடுவோம். இப்போ நாளைக்கு காலையில் இட்லி சுட வேண்டும் என்றால் முதல் நாளே நாம் மாவை அரைத்து வைக்க வேண்டியிருக்கும். நம் வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி உளுந்து போட வேண்டும் என்று நமக்கு தெரியும், அதுவே கோடை விடுமுறை அல்லது உறவினர்கள் வருகிறார்கள். அப்போது நீங்கள் எத்தனை நாள் வீட்டில் தங்குகிறார்களோ அந்த நாட்கள் வரைக்கும் நீங்கள் உணவு செய்ய வேண்டியிருக்கும். காலை உணவாக இட்டலி செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு அரிசி உளுந்து தேவைப்படும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் 10 பேருக்கு இட்லி செய்ய எவ்வளவு அரிசி உளுந்து தேவைப்படும் என்பதை அறிந்து கொள்வோம்.
10 பேருக்கு இட்டலி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்:
தேவையான பொருட்கள் | அளவுகள் |
அரிசி | 1 1/4 கிலோ |
உளுந்து- 1/4 கிலோ | 1/4 கிலோ |
வெந்தயம் | ஒரு கைப்பிடி |
இட்லி மாவு அரைக்கும் முறை:
அதுவே வெள்ளை உளுந்தாக இருந்தால் 1 மணி நேரம் ஊறினால் போதும். முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை தான் அரைக்க வேண்டும். உளுந்து மாவு அரைக்கும் போது அதில் கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்க வேண்டும். அப்போது தான் மாவு உளுந்து மாவு நிறைய இருக்கும்.
அடுத்ததாக அரிசி போட்டு அரைக்க வேண்டும். அரிசியை ரொம்ப நேவாக அரைக்க கூடாது. நேவாக அரைத்தால் இட்டலி கல்லு போல இருக்கும். அதனால் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்து முடித்ததும் மாவை கரைக்கும் போது கல் உப்பு 2 கைப்பிடி சேர்த்து கரைக்க வேண்டும்.
உங்களுக்கு மறுநாள் எவ்வளவு மாவு பயன்படுத்த போகிறீர்களோ அவ்வளவு மாவுக்கு மட்டும் உப்பை போட்டு கரைத்து கொள்ளுங்கள். மீதி இருக்குற மாவை உப்பு போடாமல் கரைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மாவு புளிக்காமல் இருக்கும்.
7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு..?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |