1250 Square Feet House Construction Cost
யாருக்கெல்லாம் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் 1250 சதுர அடியில் புதிதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதனால் பதிவை முழுவதுமாக படித்து என்னென்ன பொருட்கள் எந்த அளவில் வேண்டும் என்றும் அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
1250 சதுர அடியில் புதிய வீடு:
செங்கல் அளவு மற்றும் விலை:
1250 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு மொத்தமாக 26,450 செங்கல் தேவைப்படும். ஆகவே 1 செங்கலின் விலை 11 ரூபாய் என்றால் மொத்தமாக செங்கல் வாங்க 2,90,950 ரூபாய் தேவைப்படும்.
சிமெண்ட் மூட்டை அளவு மற்றும் விலை:
நீங்கள் கட்டவிருக்கும் வீட்டிற்கு 500 சிமெண்ட் மூட்டை தேவைப்படுகிறது. 1 சிமெண்ட் மூட்டையின் விலை 400 ரூபாய் என்பதால் உங்களுக்கு 2,00,000 ரூபாய் தேவைப்படும்.
மணல் அளவு மற்றும் விலை:
முதலில் M சாண்ட் மணலில் மொத்தமாக 1250 சதுர அடிக்கு 25 யூனிட் வேண்டும். 1 யூனிட்டின் விலை 38,000 ஆயிரம் என்பதால் தோராயமாக 9,50,000 ரூபாய் வேண்டும்.
மேலும் P சாண்ட் மணலில் மொத்தமாக 7 1/2 யூனிட் தேவைப்படுகிறது. ஆகவே 1 யூனிட்டின் விலை 5000 ரூபாய் என்பதால் 37,500 ரூபாய் தேவைப்படுகிறது.
2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..
ஜல்லியின் அளவு மற்றும் விலை:
20 mm Aggregate:
1250 சதுர அடி வீட்டிற்கு 12 1/2 யூனிட் ஜல்லி தேவைப்படும். அப்படி என்றால் 20 mm அளவில் உள்ள ஜல்லி வாங்க 37,500 ரூபாய் தேவைப்படும்.
40 mm Aggregate:
அதேபோல் 40 mm அளவில் உள்ள ஜல்லி 5 யூனிட் வாங்க மொத்தமாக 14,000 ரூபாய் தேவைப்படுகிறது. இங்கு 1 யூனிட் ஜல்லியின் விலை என்பது 2,800 ரூபாயாகும்.
கம்பி அளவு மற்றும் விலை:
1250 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படு கம்பியின் அளவு 6.5 டன் ஆகும். அப்படியென்றால் தோராயமாக 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்றால் 6.5 டன் கம்பியின் விலை தோராயமாக 4,87,500 ரூபாய் ஆகும்.
டைல்ஸ் அளவு மற்றும் விலை:
புதிதாக மேலே குறிப்பிட்டுள்ள அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு 1,500 டைல்ஸ் தோராயமாக தேவைப்படுகிறது. இத்தகைய டைல்ஸின் விலை தோராயமாக 95,700 ரூபாய் ஆகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் இல்லாமல் பெயிண்டிங், தண்ணீர் மற்றும் ஆட்கள் செலவு, கதவு, ஜன்னல் என இந்த பொருட்களும் தேவைப்படுகிறது.
ஆகவே நீங்கள் புதிதாக 1250 சதுர அடியில் வீடு கட்ட போகிறீர்கள் என்றால் முதலில் 15,00,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் நீங்கள் வாங்கும் பொருட்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலையில் ஏற்ற இறக்கம் காணப்படலாம்.
2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |