2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..

Advertisement

1800 sq Feet House Plan

பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சேமித்து வைத்த பணத்தை விட கூடுதல் செலவாகும். அந்த சமயத்தில் நீங்கள் கட்டி கொண்டிருக்கின்ற வீட்டை பாதியிலே நிறுத்த முடியாது. அதனால் வீட்டை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே வீட்டை கட்ட எவ்வ்ளவு செலவாகும் எனது அறிந்து கொள்ள வேண்டும். நம் பதிவில் தினந்தோறும் சதுர அடியை வைத்து அதில் வீடு கட்டினால் எவ்வளவு செலவாகும் என்பதை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 1800 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு பொருட்கள் தேவைப்படும், மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்:

சிமெண்ட் மூட்டை:

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்

1800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 750 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 750 சிமெண்ட் மூட்டையின் விலை 3 லட்சம் தேவைப்படும்.

கம்பி:

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்

அடுத்து ஸ்டீல் 8 டன் தேவைப்படும். ஒரு டன் கம்பியின் விலை 75,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்போ 8 டன் ஸ்டீல் விலை 6 லட்சம் தேவைப்படும்.

மணல்:

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்

M சாண்ட் 35 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 10 யூனிட் மணல் வாங்குவதற்கு 1,33,000 ரூபாய் தேவைப்படும்.

P சாண்ட் 12 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 12 யூனிட் விலை 60,000 ரூபாய் தேவைப்படும்.

ஜல்லி:

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்

20 mm aggregate 15 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 15 யூனிட் விலை 45,000 ரூபாய்.

40 mm aggregate 8 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 8 யூனிட் விலை 22,400 ரூபாய்.

செங்கல்:

1800 சதுரடியில் வீடு கட்ட தேவையான பொருட்கள்

செங்கல் 11,000 கல் தேவைப்படும். ஒரு கல் 11 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 38500 கல்லின் விலை 4,23,500 ரூபாய் தேவைப்படும்.

டைல்ஸ்:

1800 சதுரடியில் டைல்ஸ் போடுவதற்கு 2100 தேவைப்படும். டைல்ஸ் வாங்குவதற்காக 1,15,500 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 16,99,400 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறப்பட்டுள்ளவை முக்கியமாக வாங்க கூடிய செலவுகள் மட்டும் தான் பதிவிட்டுள்ளோம். இது இல்லாமல் ஆட்கள் கூலி, கதவு, ஜன்னல், பெயிண்ட் அடிப்பதற்கான செலவு, பைப் போடுவதற்கான செலவுகள் எல்லாம் இருக்கின்றது. இந்த செலவுகள் மேல் கூறப்பட்டுள்ள செலவுகள் என சேர்த்து தோராயமாக 1800 சதுர அடி வீடு கட்டுவதற்கு 40 லட்சம் தேவைப்படும்.

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement