1300 sq ft House Construction Cost in India
பொதுவாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக பணத்தை சேர்த்து வைத்து தான் கட்டுவார்கள். கையில் பணத்தை 2 லட்சமாவது வைத்து தான் கட்ட ஆரம்பிப்பார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்று தெரியாமலே வீடு கட்டுவதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் பணத்தை சேமிப்பது வைப்பதற்கு ஈசியாக இருக்கும் அல்லவா.! அதனால் உங்களுக்கு உதவும் வகையில் 1300 சதுர அடி வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகளை தோராயமாக தெரிந்து கொள்வோம் வாங்க..
1300 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்:
சிமெண்ட் வாங்குவதற்கான செலவு:
1300 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் வாங்குவதற்கு 650 மூட்டைகள் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 400 ரூபாய் என்றால் 650 மூட்டையின் விலை 2,60,000 ரூபாய் செலவு ஆகும்.
கம்பி வாங்குவதற்கான செலவுகள்:
கம்பி மொத்தமாக 7 டன் தேவைப்படும். ஒரு டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்றால் 7 டன் கம்பியின் விலையானது 5,25,000 ரூபாய் கம்பி வாங்குவதற்கு செலவாகும். கம்பியின் தரத்தை பொறுத்து விளையும் மாறுபடும்.
1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும்..! அதற்கு தேவையான பொருட்கள்..!
மணல் வாங்குவதற்கான செலவு:
M சண்ட் மணலானது 23 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலையானது 3800 ரூபாய் என்றால், 87,400 ரூபாய் செலவாகும்.
P சாண்ட் மணலானது 9 யூனிட் தேவைப்படுகிறது, இதன் ஒரு யூனிட் விலையானது 5000 ரூபாய் என்றால் 9 யூனிட் விலையானது 45,000 ரூபாய் வேண்டும்.
1300 சதுர அடிக்கு எவ்வளவு ஜல்லி தேவைப்படும்:
20 mm aggregate 13 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 13 யூனிட் விலை 39,000 ரூபாய்.
40 mm aggregate 7 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 2800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 7 யூனிட் விலை 19,600 ரூபாய்.
செங்கல் எவ்வளவு தேவைப்படும்:
1300 சதுர அடிக்கு 25,000 கல் தேவைப்படும். ஒரு கல்லின் விலையானது 11 ரூபாய் என்றால் 2,75, 000 ரூபாய் செலவாகும்.
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் வீடு கட்டுவதற்கு முக்கியமான தேவைப்படும் பொருட்களாக இருக்கிறது. இது இல்லாமல் டைல்ஸ் மற்றும் மின்சாரம் இழுப்பதற்கான செலவு, பைப் இழுப்பதற்கான செலவு என இருக்கிறது. ஆக இந்த செலவுகளை வைத்து பார்க்கும் போது 1300 சதுர அடியில் வீடு கட்ட 20 லட்சம் தேவைப்படும். இந்த தொகையை விட அதிகமாகவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.
500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |