Baby Shower Cost
பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதோ ஒரு சுபநிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் மகழ்ச்சியான ஒரு தருணமாக இருக்கும். ஆனால் என்ன தான் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட செலவுகள் என்பது தாறுமாறாக தான் காணப்படும். அந்த வகையில் பார்த்தால் சிலர் வீட்டில் நடக்கும் எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு முதலில் ஒரு பட்ஜெட்டினை ரெடி செய்து அதன் படியே செலவுகளை செய்வார்கள். இதற்கு மாறாக சிலருக்கு எந்த நிகழ்வுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றியே தெரியாமல் இருக்கும். அதனால் இன்று ஒரு பெண்ணின் வளைகாப்பிற்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும், என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பது பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வளைகாப்புக்கு தேவையான பொருட்கள்:
பொதுவாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வளைகாப்பு என்பது வாழ்வில் மறக்கமுடியாது ஒரு தருணமாக தான் இருக்கும். ஏனென்றால் ஒரு பெண் தாய்மை அடைந்த பிறகு மற்றொரு வாழ்க்கையினை வாழ போவதாக கூறுவார்கள்.
இப்படிப்பட்ட கனவுகளுடன் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும்..
- கண்ணாடி வளையல்
- நாற்காலி
- மஞ்சள் மற்றும் குங்குமம்
- பூக்கள்
- பழங்கள்
- 7 வகையான சாதம்
- வேப்பிலை காப்பு
- இனிப்பு
- அரிசி பிள்ளையார்
- பரிசு அளிக்கும் ஏதேனும் ஒரு பொருள்
- பத்திரிக்கை
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் ஒரு வளைகாப்பிற்கு செய்ய தேவைப்படும் பொருளாகும்.
350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா
வளைகாப்பு நடத்த செலவு எவ்வளவு..?
வளைகாப்பிற்கு ஆகும் செலவு | ||
தேவைப்படும் பொருட்கள் | பொருட்களின் அளவு | மொத்த விலை |
கண்ணாடி வளையல் | 5 டசன் | 300 ரூபாய் |
மஞ்சள் மற்றும் குங்குமம் | 100 | 200 ரூபாய் |
பழங்கள் | அனைத்து வகையான பழங்கள் | 3,000 ரூபாய் |
இனிப்புகள் | ஏதாவது ஒரே ஒரு இனிப்பு மட்டும் | 2,000 ரூபாய் |
வேப்பிலை காப்பு | 2 | — |
அரிசி பிள்ளையார் | 1 | 25 ரூபாய் |
பூக்கள் | 2 கிலோ | 1000 ரூபாய் |
பரிசு அளிக்கும் பொருள் | 100 | 10,000 ரூபாய் |
7 வகையான சாப்பாடு | 120 நபருக்கு | 10,000 ரூபாய் |
காபி அல்லது டீ | 120 நபருக்கு | 500 ரூபாய் |
மஞ்சள் பை | 100 | 2,000 ரூபாய் |
பத்திரிக்கை | 100 | 2,000 ரூபாய் |
மளிகை பொருட்கள் | 100 நபருக்கு தேவையான அளவு | 10,000 ரூபாய் |
போக்குவரத்து வசதி | — | 3,000 ரூபாய் |
மொத்த செலவு | 44,025 ரூபாய் |
மேலே சொல்லப்பட்டுள்ள செலவுகள் அனைத்தும் இருந்தாலும் கூட இவை இல்லாமல் இடம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதுவே நீங்கள் வளைகாப்பினை வீட்டிலோ அல்லது கோவிலிலோ வைத்து விட்டால் இதற்கான செலவு என்பது இருக்காது.
அப்படி என்றால் 100 நபருக்கு சொல்லி ஒரு பெண்ணின் வளைகாப்பினை வீட்டில் நடத்த வேண்டும் என்றால் தோராயமாக 50,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்வது நல்லது.
மேலும் பரிசு அளிக்கும் பொருள் என்பது உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளலாம். ஒரு வேளை பணம் போதுமான அளவு இல்லை என்றால் பரிசு பொருள் கூட வேண்டியது இல்லை.
அதேபோல் பத்திரிகை என்பது நீங்கள் அடிக்கும் மாடலை பொறுத்து தான் அமையும்.
2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |