350 சதுர அடியில் வீடுகட்ட தேவைப்படும் பொருட்களும் செலவும்
சொந்த வீடு என்பது ஒருவரின் அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்லும் சொத்தாக வீட்டையே கருதுகின்றனர். இது ஒரு பக்கம் என்றால், வாடகை வீட்டில் வசிப்பவர்களின் கஷ்டங்கள் மிகவும் அதிகம். சொந்தக்காரர்கள் வந்து தங்கினால் பிரச்சினை, தண்ணீர் பிரச்சனை, சுவற்றில் அணி அடிப்பதில் பிரச்சனை இதுபோன்ற காரணங்களால் சுதந்திரமாக நம் வீட்டைப் பயன்படுத்த முடியாது. வீட்டு உரிமையாளர்களின் தலையீடு எல்லா நிலைகளிலும் இருக்கும். ஒவ்வொரு முறை வீடு மாறும்போது தேவைப்படும் உழைப்பு, செலவு, பொருட்களில் ஏற்படும் சேதங்கள், அடையாள அட்டையில் முகவரி மாறுதல், குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு இப்படி பல விசயங்களில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும், இந்த பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து நம்மை சொந்த வீடு கட்ட தூண்டும்.
ஆனால் வீடு கட்டுவதால் ஏற்படும் செலவு நமக்கு பயத்தை உண்டாக்கும். அந்த பயத்தை விட்டுவிட்டு வீடுகட்டுவதில் உள்ள சிக்கன வழிமுறைகளை தெரிந்துகொண்டால், உதாரணத்திற்கு எந்த பொருட்கள் எங்கு வாங்கினால் செலவு குறைவாகவும் தரமானதாகவும் இருக்கும். எந்த பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் இப்படி அனைத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து செய்தல், வீடுக்காட்டுவதை பற்றி பயம்கொள்ள தேவையில்லை. இந்த பதிவில் 350 சதுர அடியில் வீடுகட்ட எவ்வளவு செலவாகும் என்பதனை தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
350 சதுர அடியில் வீடுகட்ட எவ்வளவு செலவாகும்.
வீடு கட்ட தேவையான பொருட்கள்:
- செங்கல்
- சிமெண்ட்
- மணல்/எம்-மணல்.
- ஜல்லி
- கதவுகள்
- ஜன்னல்
- கம்பிகள்
- ஓடுகள்
- வர்ணங்கள்
- மின்சார பொருட்கள்
- பிளம்பிங் பொருட்கள்
- சுகாதார பொருட்கள்
- தச்சு பொருட்கள்
மொத்தம் எவ்வளவு செங்கல் தேவைப்படும்:
ஒரு சதுர அடிக்கு அதிகபட்சம் 45 செங்கற்கள் தேவைப்படும் அப்படி என்றால் 350 சதுர அடிக்கு 14000 முதல் 15000 வரை செங்கற்கள் தேவைப்படும்.
கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் கற்கள் கலவகைகளில் உள்ளது. அவை: எரிந்த களிமண் செங்கற்கள், ஃப்ளை ஆஷ்,கான்கிரீட் செங்கற்கள்,இன்ஜினியரிங் செங்கற்கள், கால்சியம் சிலிக்கேட் செங்கற்கள், எக்கோ செங்கற்கள் போன்றவை.
எரிந்த களிமண் செங்கல் ஒன்றின் விலை ரூபாய் 5 முதல் 12 வரை காணப்படும். ஃப்ளை ஆஷ் கல் ஒன்றின் விலை ருபாய் 8 முதல் 10 வரை இருக்கும்.
கான்கிரீட் கல் ஒன்றின் விலை ருபாய் 10 முதல் 11 வரை இருக்கும்.
இன்ஜினியரிங் செங்கற்கள் விலை ஒன்று குறைந்தபட்சம் 10 இருக்கும்.
கால்சியம் சிலிக்கேட் செங்கற்கள் விலை சராசரி ஒரு கல்லின் விலை ரூபாய் 100 வரை இருக்கும்,
எக்கோ செங்கற்கள் விலை ருபாய் 6 முதல் 8 வரை இருக்கும்.
இவற்றில் விலை மலிவானதும் தரமானதை பயன்படுத்துவதால் உங்கள் செலவையும் வீட்டின் தரத்தையும் உயர்த்தலாம்.
2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..
350 Sq Ft House Build Total sand in Tamil:
மணல் 5 unit முதல் 7 unit வரை செலவாகும். ஒரு unit ஆற்று மணலின் விலை ரூபாய் 1000 என்று தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. தமிழக அரசியின் இணைய பக்கத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். உங்கல் வீட்டிற்கு 7 unit வரை தேவைப்படும் அதற்கான விலை ரூபாய் 7000 வரை இருக்கும்.
சிமெண்ட் 200 மூட்டைகள் வரை செலவாகும். ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூபாய் 450 எனில் 200 முட்டைகளின் விலை ரூபாய் 90,000 ஆகும்.
1 1/2 ஜல்லி 3 யுனி தேவைப்படும். இதனுடைய விலை 10,800, 3/4 ஜல்லி 5 யூனிட் தேவைப்படுகிறது. இதனுடைய விலை 19,500 ரூபாய்.
கம்பி 580 கிலோ தேவைப்படுகிறது. 8,640 ரூபாய் தேவைப்படும். மேல் கூறப்பட்டுள்ள செலவு மட்டும் 3,10,940 செலவாகும்.
வேலை செய்வதற்கான ஆட்களுக்கு 1,50,000 ரூபாய் தேவைப்படும். பொருட்களின் செலவு மற்றும் ஆட்களின் கூலி என மொத்தமாக சேர்த்து 4,60,940 ரூபாய் பேஸ்மெண்ட் போடுவதற்கு செலவாகும்.
500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா.?.?
350 Sq Ft House Build Total Cost in Tamil:
பேஸ்மெண்ட் போட்ட பிறகு வீடு கட்டுவதற்கான மொத்த செலவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
சிமெண்ட் 460 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 450 ரூபாய் என்றால் 460 மூட்டையின் விலை 2,07,000 ரூபாய் தேவைப்படும்.
மணல் 35 யூனிட் தேவைப்படும். இதற்கான தேவைப்படுகின்ற தொகை 35,000 ரூபாய் தேவைப்படுகின்றது.
3/4 ஜல்லி 12 யூனிட் தேவைப்படும். இதற்கு 45,600 ரூபாய் செலவாகும். 1 1/2 ஜல்லி 4 யூனிட் தேவைப்படும். இதற்கு 13,570 ரூபாய் செலவாகும்.
கம்பி 2500 கிலோ தேவைப்படும். இதற்கான செலவு 2,00,000 ரூபாய் தேவைப்படும்.
செங்கல் 18,625 கல் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 2,23,000 ரூபாய் தேவைப்படும். கிராவல் 7 யூனிட் தேவைப்படுகிறது. இதற்கான செலவு 8,225 ரூபாய் தேவைப்படும்.
எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்வதற்கு 58,000 ரூபாய் தேவைப்படும்.
பெயிண்ட் அடிப்பதற்கு 23,000 ரூபாய் தேவைப்படும். ஆசாரி வேலை செய்யும் பொருட்களுக்கு 1,88,000 ரூபாய் செலவாகிறது.
மேல் கூறப்பட்டுள்ள செலவுகளை சேது மொத்தமாக 20,36,200 ரூபாய் செலவாகும்.
வேலை செய்வதற்கான ஆட்களுக்கு 10,50,000 ரூபாய் தேவைப்படும்.அடுத்து பொருட்களின் செலவு ஆட்களின் கூலி என சேர்த்து மொத்தமாக 30,86,200 ரூபாய் தேவைப்படும்.
1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!
350 Sq Ft வீடு கட்ட ஆகும் செலவு:
ரூப் கான்கிரிட் போடுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செலவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
சிமெண்ட் 130 மூட்டை தேவைப்படும், இதனை வாங்குவதற்கு 63,000 ரூபாய் தேவைப்படும்.
மணல் 1 யூனிட் தேவைப்படும். இதற்கான செலவு 18,750 ரூபாய்.
கம்பி 1500 கிலோ தேவைப்படும், இதற்கான செலவு 1,20,000 ரூபாய் தேவைப்படுகிறது. எலெட்ரிக்கல் வேலை செய்வதற்கு பைப்பின் விலை 15,000 ரூபாய் தேவைப்படும்.
மேல் கூறப்பட்டுள்ள செலவுகளை மொத்தமாக சேர்த்தால் 8,81,395 ரூபாய் செலவாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |