150 குழிக்கு எவ்வளவு செலவு ஆகும்
நாம் அனைவரும் நாள்தோறும் மூன்று வேலையும் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு விவசாயம் செய்தே ஆகா வேண்டும். விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்று கூறுவார்கள். ஏனென்றால் மற்ற வேலையை போல விவசாயம் என்பது கிடையாது. விவசாயம் நாம் செய்யும் போது நல்ல முறையில் இருந்தால் மட்டும் போதாது. நாற்று நடுதல், கலைப்பறித்தல் மற்றும் தண்ணீர் விடுதல் என இதுபோன்ற வேலை எல்லாம் முடிந்த பிறகு கடைசிடியாக தான் அறுவடை என்பதே செய்யப்படுகிறது. மேலும் ரகங்களை பொறுத்தவரை வகைகள் என்பது அதிக அளவு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு நெல்லுக்கும் அறுவடை காலம் என்பது மாறுபடும். ஆனால் ஒரு சிலருக்கு வீட்டில் நிலம் இருந்தும் கூட என்னென்ன வேலை எப்போது செய்ய வேண்டும் என்றும், அதற்கான செலவு என்ன என்றும் தெரியாமலே இருக்கிறது. ஆகவே இன்று 1 ஏக்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன செலவு ஆகும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
150 குழி இடத்தில் நெற்பயிரை விளைவிக்க எவ்வளவு செலவாகும்:
உழவு செலவு:
நீங்கள் 150 குழியில் நடவு செய்வதற்கு முதலில் நாற்றங்காலை சீர்செய்ய வேண்டும். நாற்றங்களை உழவு செய்ய இப்போது டிராக்டருக்கு ஒரு நடை உழவு செய்ய மாக்கு ரூபாய் 1000 தேவைப்படுகிறது.
பிறகு விதை தெளிப்பு அதற்கான அடி உரம், களை எடுப்பதற்கு என்ன சுமார் ரூபாய் 3 ஆயிரம் வரை தேவைப்படுகிறது.
விதைப்பில் இருந்து 38 நாட்கள் அல்லது 40 நாட்கள் கழித்து நாற்றுகளை பறிக்க ஒரு வேலை ஆளுக்கு ரூபாய் 500 சம்பளம் வழங்கப்படுகிறது.
150 குழிக்கு நாற்றுப்பரிக்க 4 நபர்கள் தேவைப்படுவார்கள். அவர்கள் ஒருவருக்கு சம்பளம் 500 விதம் 4 நபர்களுக்கு ரூபாய் 2000 தேவைப்படும்.
நடவு தொடங்கும் போது நிலத்தை இரண்டு தடவை உழவு செய்ய வேண்டும். அப்போது தான் அதில் உள்ள செடிகள் எல்லாம் அழிந்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு நடை உழவு செய்வதற்கு 500 ரூபாய் என்றால் இரண்டு தடவை உழவு செய்வதற்கு 1000 ரூபாய் தேவைப்படும்.
நடவு செய்ய:
150 குழிக்கு நடவு செய்ய 4 நபர்கள் தேவைப்படுவார்கள். அவர்களின் சம்பளம் ஒருவருக்கு ரூபாய் 250 விதம் 4 நபருக்கு ரூபாய் 1000 செலவாகும். இதர செலவுகள் ஒரு நாளுக்கு 500 வரை செலவுகள் இருக்கும்.
களை செலவு:
நடவு செய்து 1 மாதத்தில் களை எடுக்க வேண்டும். அதற்கு 5 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 5 ஆட்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஒரு களை எடுத்த பிறகு அடுத்த 45-வது நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கும் 5 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 5 ஆட்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
மருந்து செலவு:
நாற்றகளுக்கு அடி உரம் கொடுக்க 150 குழிக்கு 800 செலவாகும். நடவு நட்ட பிறகு 5 நாட்கள் கழித்துபயிருக்கு மீண்டும் அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு DAP 16 கிலோவும், பொட்டாஷ் 8 கிலோவும் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 1200 ரூபாய் செலவாகும்.
அதற்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு தெளிப்பு மருந்து கொடுக்க வேண்டும். அதற்கு DAP 20 கிலோவும், யூரியா 10 கிலோவும் தேவைப்படும். இதற்கு 1500 ரூபாய் செலவாகும். அடுத்து 30 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். அதற்கு 1000 ரூபாய் செலவாகும்.
இதற்கு இடையில் பூச்சி தொல்லை ஏதும் இருந்தால் அதற்கு தனியாக மருந்து அடிக்க வேண்டியிருக்கும்.
அறுவடை:
மிசின் வைத்து அறுக்கும் போது 1 மணி நேரத்திற்கு 1500 ரூபாய் செலவாகும். 150 குழியை அறுவடை செய்வதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் செலவாகும். 45 நிமிடத்திற்கு ரூபாய் 1000 வசூலிக்கப்படுகிறது.
மேல் கூறப்பட்டுள்ள செலவுகள் மொத்தமாக 15,000 ரூபாய் தேவைப்படுகிறது.
வருமானம்:
150 குழியில் பயிரிட்டால் 22 முதல் 28 மூட்டை விளைச்சல் கிடைக்கும். இதனை விற்கும் போது நமக்கு 22,400 ரூபாய் வருமானமாக பெறலாம். இந்த விலையானது நாம் விதைக்கப்பட்டிருக்கும் பயிரை பொறுத்து வருமானம் மாறுபடும்.
550 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |