வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

550 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?

Updated On: August 10, 2023 12:46 PM
Follow Us:
Modern House Plan 25*22 550 sqft 2 BHK in tamil
---Advertisement---
Advertisement

550 Square Feet House Plan and Total Cost in Tamil

இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது பலரது ஆசையாகவும் கனவாகவும் உள்ளது. தங்கள்து ஆசை வீட்டினை கட்டுவதற்காக பணம் சேமித்து வைத்திருப்பவரகள் வீடு கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதுவே பணம் இல்லாதவர்கள் வீடு கட்ட என்னென்ன பொருட்கள் வேண்டும் அதை வாங்குவதற்கான செலவுகள் ஆகும் என்பதையெல்லாம் கணக்கு போடுவார்கள். இப்பொழுது நீங்கள் வீடு கட்ட போகின்றிர்கள் என்றால் அதற்கு இவ்வளவு இவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் அதற்கேற்றபடி பணத்தை சேமித்து வைக்கலாம் அல்லவா.! அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் 550 சதுர அடியில் 2 Bedroom-டன் கூடிய வீடு கட்ட எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் மற்றும் எவ்வளவு செலவாகும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Modern House Plan 25*22 550 sqft 2 BHK:

550 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு:

ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு செங்கல், சிமெண்ட், மணல்/எம்-மணல், ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்), வூட்ஸ், கதவுகள், ஜன்னல், எஃகு, ஓடுகள், வர்ணங்கள், மின்சார பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், சுகாதார பொருட்கள், தச்சு பொருட்கள், False Ceiling Materials மற்றும் தண்ணீர் வசதி போன்றவை தேவைப்படும்.

2 பெட்ரூம் உள்ள வீடு கட்ட இவ்வளவு கம்மியான Amount இருந்தா போதுமா..! அப்போ எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்..?

எவ்வளவு சீமெண்ட் தேவைப்படும்:

வீடு கட்டுவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் பொருட்களில் ஒன்று தான் சிமெண்ட். இப்பொழுது 550 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும் அதற்கு எவ்வளவு செலவாகும் பார்க்கலாம்.

அதாவது 550 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 190 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 450 என்ற பட்சத்தில் 85,500 செலவு ஆகும்.

550 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

இந்த கம்பிகள் தான் வீட்டிற்கு மொத்தமாக உறுதியை சேர்க்கும். ஆகவே அதனை சரியாக வாங்கிகொள்வது அவசியம். 550 சதுரடி வீட்டிற்கு எவ்வளவு கம்பிகள் தேவைப்படும் என்றால் 2.75 டன் ஆகும்.

550 சதுர அடி கூடிய வீடு கட்டுவதற்கு செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா..?

அப்படியென்றால் தோராயமாக 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்றால் 2.75 டன் கம்பியின் விலை தோராயமாக 2,06,250 ரூபாய் ஆகும்.

550 சதுரடிக்கு எவ்வளவு கல் தேவைப்படும் 10,900 கல் தேவைப்படும். ஒரு கல்லின் விலையானது 11 ரூபாய் என்றால் 10,900 கல்லின் விலை எவ்வளவு 1,09,900 ரூபாய் ஆகும்.

வீடு கட்டுவதற்கு எவ்வளவு M சாண்ட் மணல் தேவைப்படும். இந்த M சாண்டின் 1 யூனிட் விலை 38,000 ஆயிரம் ஆகும். அப்படியென்றால் நமக்கு 9 யூனிட் மணல் தேவைப்படும்.

550 sq ft house material cost in india in tamil

இதனுடைய விலையானது தோராயமாக 3,42,000 ரூபாய் ஆகும். ஒருவேளை நீங்கள் P சாண்ட் மணலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனின் 1 யூனிட் விலை 5000 ரூபாய் ஆகும்.

நமக்கு தோராயமாக 2.5 யூனிட் மணல் தேவைப்படும். இதனுடைய விலையானது 18,500 ரூபாய் ஆகும்.

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதாவது 20 mm Aggregate ஜல்லி, 40 mm Aggregate ஜல்லி ஆகிய இரண்டுமே தேவைப்படும்.

20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும். நமக்கு 5.5 யூனிட் தேவைப்படும். இதன் விலை மொத்தம் 16,500 ரூபாய் ஆகும்.

அதேபோல் 40 mm Aggregate ஜல்லியின் விலை 2800 ரூபாய் என்றால் நமக்கு தேவையான ஜல்லிகள் 1.4 யூனிட் ஆகும். அப்படி என்றால் 3,920 ரூபாய் செலவு ஆகும்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் தான் வீடு கட்டுவதற்கு முக்கிய தேவை. அதற்கு பிறகு வீட்டிற்கு டைல்ஸ் அதன் பின்பு கரண்ட் என நிறைய செலவுகள் இருக்கும். அது அனைத்தும் உங்களின் வீட்டின் வசதிகளை பொறுத்து மாறுபடும்.

ஆகையால் பொதுவாக வீடு கட்ட ஆரம்பித்தால் 7,00,000 முதல் 8,28,000 ரூபாய் கையில் வைத்து கொண்டு ஆரம்பிப்பது நல்லது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

1500 sq ft House Construction Cost in Tamil

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

700 sq ft house construction cost in tamil

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..

Monthly Grocery List for 4 Persons in Tamil

4 பேருக்கு மாதம் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் அளவுகள்..!

sweet pongal recipe ingredients in tamil

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.! | Sakkarai Pongal Seiya Thevaiyana Porutkal

1 kg is Equal to How Many Litres in Tamil

1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்று தெரியுமா.?

How Many Persons Can Eat 1 kg Rice in Tamil

1 கிலோ அரிசியில் சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம் தெரியுமா.?

How Many Inches is 100 Feet in Tamil

100 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா..?

500 sq ft house plans cost in tamil

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா.?.?

lunch for 50 persons ingredients in tamil

50 பேருக்கு சாதம், சாம்பார், வறுவல், கூட்டு செய்ய செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?