650 Sq ft House Plans Cost India
புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் மனை போடும் நாட்கள் முதல் வீடு கிரகப்பிரவேசம் செய்யும் நாட்கள் வரை வேலை என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இதுபோன்ற வேலைகள் இருந்தால் கூட நாம் சமாளித்து விடலாம். ஆனால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் எவ்வளவு வேண்டும், அதற்கு முதலில் எவ்வளவு ரூபாய் நாம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என இதுபோன்றவை தான் நமக்கு அதிக குழப்பங்களை ஏற்படுத்தும். ஆகையால் ஒரு வீடு கட்டப்போகிறோம் என்றால் அதற்கு முதலில் ஒரு திட்டமிடுதலும், கணக்கிடும் தன்மையும் வேண்டும். அதனால் இன்று ஒரு உதாரணமாக 650 சதுர அடியில் 2 பெட்ரூமுடன் கூடிய வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா
650 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்களின் அளவு மற்றும் தொகை:
650 Sq ft House Material Cost in India | |||
பொருட்களின் பட்டியல் | தேவைப்படும் அளவு | 1 Q-யின் விலை | மொத்த விலை |
M சாண்ட் மணல் | 12 யூனிட் | 3,500 ரூபாய் | 42,000 ரூபாய் |
P சாண்ட் மணல் | 3.5 யூனிட் | 4,300 ரூபாய் | 15,050 ரூபாய் |
சிமெண்ட் மூட்டை | 340 மூட்டை | 400 ரூபாய் | 1,36,000 ரூபாய் |
கம்பி | 3150 கம்பி | 72 ரூபாய் | 2,26,250 ரூபாய் |
செங்கல் | 11,800 செங்கல் | 9 ரூபாய் | 1,06,200 ரூபாய் |
20 mm ஜல்லி | 8.5 டன் | 2,700 ரூபாய் | 22,950 ரூபாய் |
40 mm ஜல்லி | 2.5 டன் | 2,500 ரூபாய் | 6,250 ரூபாய் |
டைல்ஸ் | 900 | 90 ரூபாய் | 81,000 ரூபாய் |
மொத்த தொகை | 6,35,700 ரூபாய் |
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் மட்டும் இல்லாமல் மரப்பொருட்கள், பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான இதர பொருட்கள், ஜன்னல் மற்றும் கதவு, எஃகு, மின்சாரதிற்கு தேவையான பொருட்கள், தண்ணீர் வசதி இவை அனைத்தும் தேவைப்படுகிறது.
ஆகவே நீங்கள் 650 சதுர அடியில் புதிதாக ஒரு வீடுக் கட்ட போகிறீர்கள் என்றால் ஆரம்பத்தில் தோராய முதலீடாக 3,50,000 ரூபாய் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |