Diaper Size for Adults in Tamil
நம் வீடு மட்டுமின்றி நம் நாடுகூட நல்ல போக்கில் போகின்றது என்றால் அதற்கான காரணங்களில் ஒன்று பெரியவர்களின் அறிவுரைகள், அப்படி பட்ட பெரியவர்களை நாம் கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்ள வேண்டும். வயதாக ஆக பெரியவர்களும் குழந்தைகள்தான். அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து அனைத்தும் குழந்தைகள் போலவே ஆகிவிடும். அப்படிப்பட்டவர்களை பார்த்துக்கொள்வதுதான் மிகப்பெரிய சவால். நடமாட்டத்துடன் இருக்கும் பெரியவர்களை பார்த்துக்கொள்வதில் அப்படி ஒன்றும் சிரமம் இருக்காது, ஆனால் படுத்தப்படுகையில் இருப்பவர்களை பார்த்துக்கொள்வதில் தான் இருக்கிறது.
அவர்கள்கூடவே ஒருவர் இருக்க வேண்டும், அவர்களுக்கென தேவையானதை உடனிருந்து செய்துதரவேண்டும். அதில் பெரும்பங்கு அவர்களை பாத்ரூம் அழைத்து செல்வதுதான் அதற்காகத்தான் இப்போதெல்லாம் அனைவரும் டயபர்களை பயன்படுத்திவருகின்றனர். சில பேருக்கு அதனுடைய அளவு தெரியும், ஆனால் சில பேருக்கு தெரியாது அதற்கான பதிவுதான் இது. வயதானவர்களுக்கான டயபர் அளவு அல்லது Diaper size for old people in tamil அதை பற்றித்தான் கீழே பார்க்கப்போகிறோம்.
Adult Diaper Size Types in Tamil
வயதானவர்களுக்கு அணியப்படும் டயபரானது இரண்டு வகைப்படும் அவை கீழே கொடுக்கப்பட்டுளத்து.
பேன்ட் வகை டயப்பர்கள்: பெரும்பாலும் புல்-அப்கள் என்று அழைக்கப்படும் இந்த வகையான டயப்பர்களை எளிதாக அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த டயப்பர்களை மற்றவர்கள் துணையின்றி தாமே அணியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள.து
டேப் ஸ்டைல் டயப்பர்கள்: Refastenable டேப்களை உபயோகித்து இந்த வகையான டயப்பர்களை அணிவிக்கலாம்.
டயப்பர்களை மாற்றுவதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு டேப் டயப்பர்கள் பொதுவாக விரும்பப்படுகின்றன, இது பெரிதும் படுத்தப்படுகையில் இருப்பவர்களுக்கு உபயோகப்படும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்
Diaper Size for old Peoples in Tamil
அளவு | இடுப்பு (அங்குலங்கள்) | உடலெடை | பெண்கள் Pant அளவு | ஆண்கள் Pant அளவு |
Young | N/A | 28 to 42 lbs | N/A | N/A |
X-Small | 18″ to 26″ | 42 to 90 lbs | 0-3 | 18-26 |
Small | 24″ to 32″ | 85 to 100 lbs | 4-6 | 24-32 |
Medium | 32″ to 44″ | 100 to 150 lbs | 8-12 | 32-44 |
Large | 45″ to 58″ | 150 to 200 lbs | 14-18 | 44-58 |
X-Large | 56″ to 64″ | 200 to 250 lbs | 18-24 | 56-64 |
2X-Large | 60″ to 80″ | 250+ lbs | 26-28 | 60+ |
3X-Large | 64″ to 96″ | 250+ lbs | 28+ | 64+ |
4X-Large | 70″ to 106″ | 250+ lbs | 28+ | 70+ |
வயதானவர்களுக்கான டயபர் சைஸ்
ஒவ்வொரு டயபர் நிறுவனத்தை பொருத்தும் அதன் அளவுகள் மாறும். சரியான அளவைப் பெற, ஒரு நபரின் இடுப்பு மற்றும் இடுப்புகளை முதலில் அளவிட வேண்டும், அதற்கான அளவுகளை மேலே கொடுத்துள்ளோம். தவறான அளவு டயப்பர்களை அணிவதால் சிறுநீர் கசிவு ஏற்படும், அதனால் அதை பயன்படுத்துவதே வேஸ்ட் தான். அடல்ட் டயப்பர்களில் சிறிய, நடுத்தர, பெரிய, XL மற்றும் சில பதிப்புகளில் XXL உட்பட பல்வேறு அளவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
சரியான அளவிலான டயப்பர்களை தேர்வுசெய்யுங்கள்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |