புதுமனை புகுவிழாவிற்கு ஆகும் செலவு
பொதுவாக நாம் அதிக செலவுகள் செய்துதான் வீட்டை கட்டி முடித்திருப்போம். அந்த வீட்டிற்கு குடிபோக நாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளமாட்டோம் காரணம் அதிக செலவுகள். வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சி என்றாலே செலவுகள் இருக்கத்தான் செய்யும். அதற்கான செலவுகளை நாம் திட்டமிட்டால் போதும் விழாவை இனிமையாக முடித்துவிடலாம். சிலருக்கு அத்தகைய திட்டமிடலில் பல சறுக்கல்கள் இருக்கும் அவர்களுக்காக இன்று புதுமை புகுவிழாவிற்கு எவ்வளவு செலவாகும் என்றும், என்னென்ன பொருட்கள் வேண்டும் என்றும், எப்படி திட்டமிடலை தொடங்க வேண்டும் என்று பார்க்கப்போகிறோம். வாருங்கள் இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் வீட்டு விழாவை சிறந்த முறையில் திட்டமிட்டுவோம்.
புதுமை புகுவிழா செலவுகள்:
நீங்கள் ஒரு புதிய வீட்டை கட்டியுள்ளீர்கள் என்றால் அதனை கொண்டாடும் விதமாக ஒரு விருந்தை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு கொடுக்க விரும்புவீர்கள்.
நடத்த விரும்புகிறீர்கள். இது உங்களின் முதல் இல்லமாக இருந்தால், நீங்கள் எப்போதும் ஒரு ஹவுஸ்வார்மிங் கொண்டாட்டத்தை நடத்தியிருக்க மாட்டீர்கள் மேலும் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருக்கலாம். நீங்கள் கொண்டாட்டத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடனும் நடைமுறை உத்தியுடனும் அணுகினால், அது நிதானமாகவும், சுவாரஸ்யமாகவும், மலிவாகவும் இருக்கலாம்.
முதலில் விருந்தினர் பட்டியலை தொகுக்க வேண்டும். அப்போதும் தான் அழைப்பிதழில் முதல் விருந்து முதல் உங்களின் திட்டம் சரியானதாக இருக்கும்.
நீங்கள் விருந்தினர் பட்டியலை தயாரிக்கும் போது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள் என அனைவரையும் உங்கள் புதிய வீட்டிற்கு அழைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இடம் மற்றும் விருந்திற்க்கு தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும்.
இந்த புதுமனை புகுவிழா சடங்கை ஒரு நல்ல நாளில் செய்ய வேண்டும். அதற்கான தேதி மற்றும் நேரத்தை உங்களுக்கு ஏற்றது போல் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டு அலங்காரம்:
உங்கள் வீட்டை அழகானதாக மாற்ற வேண்டும். அதற்காக விட்டு வாசலை மற்றும் நிலை கதவுகளை அலங்கரிக்க பூக்கள் தேவைப்படும்.
இந்த பூக்கள் வீட்டிற்கு நறுமணமும் புத்துணர்ச்சியையும் வழங்கும்.
ஒளி விளக்குகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தும் போது அதிக அளவில் செலவுகள் ஏற்படும். ஆனால் மலர்களை பயன்படுத்தும் போது உங்களின் செலவுகள் குறையும்.
வீட்டு பூ அலங்காரத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 6,000 முதல் 10,000 வரை செலவாகும்.
அழைப்பிதழ்:
நீங்கள் அழைக்க விரும்பும் விருந்தினர்களை தேர்வு செய்த பின்னர் அவர்களை வரவேற்க அழைப்பிதழ் அச்சிடுவது முக்கியமானதாகும்.
இப்போது உள்ள காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாகவே அழைப்புகள் இருந்தாலும், மிக முக்கியமான நபர்களுக்கு அழைப்பிதழ் முக்கியமானதாக அமைகிறது.
அதற்கு பத்திரிக்கை அடிப்பதற்கு 1 பத்திரிக்கையின் விலை தமிழ்நாட்டில் ரூபாய் 15 முதல் ஆரம்பமாகிறது.
நீங்கள் ஒரு 50 பத்திரிகைகள் அடிக்க உள்ளீர்கள் என்றால் குறைந்த பட்சம் ரூபாய் 750 வரை செலவாகும்.
கணபதி பூஜை மற்றும் ஹோமம்:
உங்கள் வீட்டில் ஹோமங்கள் வளர்ப்பது இந்தியாவில் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஹோமம் வளர்க்க உங்களுக்கு ஒரு ஐயர் தேவைப்படுவர். அவருக்கு தட்சணையாக ரூபாய் 7,000 முதல் 10,000 வரை வழங்க வேண்டும்.
அடுத்ததாக கணபதி பூஜை மற்றும் ஹோமத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும்.
அந்த பொருட்கள் ஆன்மிக பொருட்கள் முதல், அன்று வீட்டில் தயாரிக்கும் பால் மற்றும் பழங்கள் வரை அடங்கும்.
மஞ்சள் தூள், குங்குமம், ரங்கோலி பொடி, வெற்றிலை மற்றும் பாக்கு, சந்தனம், நூல், பச்சை அரிசி, தேங்காய், வாழை இலைகள், விளக்கு திரி, கற்பூரம், அகர் பாத்தி, விளக்கு எண்ணெய், பால், தயிர், நெய், தேன், வெல்லம், கரும்பு, வெள்ளை எள், துளசி, காய்ந்த தேங்காய், வெள்ளை பூசணி, எலுமிச்சை, வாழைபழங்கள், ஆப்பிள், மாதுளை திராட்சை, பேரிச்சைப்பழம், இளநீர் போன்றவையும்.
இந்து வீட்டு முறைப்படி மகனின் 500 பேருக்கு சொல்லி மகனுக்கு திருமணம் செய்ய எவ்வளவு செலவாகும்..
ஹோமம் வளர்ப்பதற்கு:
தீப்பெட்டி, விறகு, செங்கற்கள், மணல், மா இலை, புதிய கலசம், தோட்டி, துண்டுகள், மல்லி, முல்லை சாமந்தி, கதம்பம் போன்றவையும்.
நவகிரக ஆடைகள் வெள்ளை சிவப்பு கருப்பு பச்சை மஞ்சள் மற்றும் நீலம் நிறங்களில் தேவைப்படும்.
நவதானியங்கள்:
நெல், கோதுமை, பச்சைப்பயிறு, உளுந்து, கொண்டக்கடலை, குதிரைவாலி, பட்டாணி போன்றவை ஹோமம் வளர்ப்பதற்கு தேவைப்படும்.
பால் காய்ச்சுவதற்கு புதிய பாத்திரங்கள், புதிய அடுப்பு, பால், தீர்த்தப் பொடி, பச்சே கற்பூரம், பெரிய ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, கிரிஸோபோகன் ஜிசானியோயிட்ஸ், காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சைப்பழம், பிஸ்தா, பாதாம் போன்றவை தேவைப்படும். இது தவிர விறகுகள், மா இலை, பசுவின் சிறுநீர் போன்றவையும் தேவைப்படும்.
உங்கள் புதுமனை புகுவிழாவில் இதற்கான செலவு ரூபாய் 10,000 முதல் 25,000 வரை தேவைப்படலாம்.
அடுத்தது மிக முக்கியமானது விருந்து 50 நபர்களுக்கு, நீங்கள் உணவை ஏதேனும் ஒரு உணவகத்தில் இருந்து பெற்றால் ரூபாய் 9,000 வரை ஆகும். அதுவே நீங்கள் உங்கள் இல்லத்திலேயே சமைத்தல் ரூபாய் 20,000 முதல் 25,000 வரை செலவுகள் ஆகும்.
மொத்தமாக ரூபாய் 76,000 வரை உங்கள் புதுமனை புகுவிழாவை எளிமையாக கொண்டாட பணம் செலவாகும்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |